லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் லியோ. வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அதே நாளில் வெளியாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.
அரசின் கோட்பாடுகள் :
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாவதால் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த பார்க்கிங் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடக்காதவாறு பல கோட்பாடுகளை தமிழக அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு விதித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அரசு நிர்ணயித்துள்ள நுழைவு கட்டணம் மற்றம் பார்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்யவும், இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
லியோ திரைப்படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் " லியோ " திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்கக் காட்சி காலை 09.00 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன. திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
நுழைவு கட்டணம் மற்றம் பார்கிங் ஏற்பாடுகளை
திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள நுழைவு கட்டணம் மற்றம் பார்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்யவும், இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள உதவி எண்கள் விவரம்
வ. எண் |
அலுவலர்களின் பெயர் / பதவி |
தொலைபேசி எண் |
1 |
வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் |
9445000413 |
2 |
வருவாய் கோட்டாட்சியர், திருப்பெரும்புதூர் |
9444964899 |
3 |
காவல் துணை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் |
9443620253 |
4 |
காவல் துணை கண்காணிப்பாளர், திருப்பெரும்புதூர் |
9566889954 |
5 |
காவல் உதவி ஆணையர், மணிமங்கலம் |
9498195151 |
6 |
காவல் உதவி ஆணையர், SRMC |
9498100123 |
7 |
காவல் உதவி ஆணையர், பல்லாவரம் |
9444474620 |
8 |
இணை இயக்குநர் / ஆணையாளர், காஞ்சிபுரம் மாநகராட்சி |
7397372823 |
9 |
வட்டார வளர்ச்சி அலுவலர், காஞ்சிபுரம் |
7402606019 |
10 |
வட்டார வளர்ச்சி அலுவலர், வாலாஜாபாத் |
7402606022 |
11 |
வட்டார வளர்ச்சி அலுவலர், உத்திரமேரூர் |
7402606028 |
12 |
வட்டார வளர்ச்சி அலுவலர், திருப்பெரும்புதூர் |
7402606033 |
13 |
வட்டார வளர்ச்சி அலுவலர், குன்றத்தூர் |
7402606038 |
14 |
நகராட்சி ஆணையாளர், மாங்காடு |
8838456642 |
15 |
நகராட்சி ஆணையாளர், குன்றத்தூர் |
9840046511 |
16 |
பேரூராட்சி செயல் அலுவலர், உத்திரமேரூர் |
8925809269 |
17 |
பேரூராட்சி செயல் அலுவலர், வாலாஜாபாத் |
8925809270 |
18 |
பேரூராட்சி செயல் அலுவலர், திருப்பெரும்புதூர் |
8925809268 |