நாள் - 17.10.2023 (செவ்வாய் கிழமை)


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


பகல் 12.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் நண்பகல் 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். மேன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். சாதனை நிறைந்த நாள்.


மிதுனம்


எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் சிக்கனமாகச் செயல்படத் துவங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். தெளிவு நிறைந்த நாள்.


கடகம்


வீடு மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். சுகவீனம் நிறைந்த நாள்.


சிம்மம்


நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும்.  உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நட்பு நிறைந்த நாள்.


கன்னி


வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அனுபவம் நிறைந்த நாள்.


துலாம்


பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பும், பணியும் அதிகரிக்கும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புகழ் நிறைந்த நாள்.


விருச்சிகம்


வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். உறவினர்களின் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். போட்டி நிறைந்த நாள்.


தனுசு


சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவு பெறும். விவேகம் நிறைந்த நாள்.


மகரம்


உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். பணி நிமிர்த்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.


கும்பம்


மனதளவில் இருந்துவந்த குழப்பம் அகலும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துரை சார்ந்த தேடல் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.


மீனம்


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் வாதங்களைத் தவிர்க்கவும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.