அம்மு அபிராமி நடிக்கும் புதியப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. 


SURYA INDRAJIT FILMS சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும்,  சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் தொடங்கியது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR படப்புகழ் ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.




முதன்முறையாக எட்டு கதாப்பாத்திரங்களும் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.  




20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை வென்று குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில்  பணியாற்ரிய B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.  சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது


ராட்சசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அந்த படத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு, அசுரன் படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா கேரியரில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் தம்பி, மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிய நவரசா படங்களில் நடித்தார். தற்போது, ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும்  ‘யானை’ படத்தில் நடித்தார்.


 






மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 யில் ஒரு போட்டியாளராகவும் அம்மு அபிராமி பங்கேற்றார்.இதன்பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது.