ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து பி.சி.ஸ்ரீராம், நானியைத் தொடர்ந்து பல்வேறு திரைத்துறையினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


69-வது தேசிய விருது


2021ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ‘ஜெய் பீம்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல் வெளியானது.


இந்நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வெற்றிபெற்ற இந்தத் திரைப்படங்கள் எதுவும் தேசிய விருது வெல்லாதது, தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியடையச் செய்துள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறையில் இருப்பவர்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வந்தார்கள்.


கேள்வி எழுப்பும் பிரபலங்கள்


ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்கப் படாதது குறித்து நடிகர் நானி வருத்தம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். “ ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா? இல்லை இந்தியாவின் குரல் அவர்களை நடுங்கச் செய்கிறது” என்று அவர் கேள்வி எழுப்பினார். 






இவர்களைத் தொடர்ந்து தற்போது போர் தொழில் படத்தில் நடித்த அசோக் செல்வன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தேசிய விருது வென்ற கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர் “ ஏன் ஜெய் பிம் படத்திற்கு எந்த விருதும் இல்லை ?” என்று பதிவிட்டுள்ளார்.






தொடரும் பிரபலங்களின் கேள்விகள்


இதனைத் தொடர்ந்து நடிகை பார்வதி நாயர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.






 பிரகாஷ் ராஜ்


“காந்தியைக் கொன்ற ஒருவரை கொண்டாடுபவர்கள் ஜெய் பீம் படத்துக்கு எப்படி விருது கொடுப்பார்கள்” என்று  மத்திய சாரை சாடி இப்படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். இதேபோல் நேற்று முதல் இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் ஜெய் பீம் படத்துக்கு விருது வழங்கப்படாதது பற்றி கேள்வி எழுப்பினர்.