சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள ஆக்‌ஷன் கேங்ஸ்டர் திரைப்படம் ஓஜி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண் , இம்ரான் ஹாஷ்மி பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டிவிவி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார். பவன் கல்யாண் நடித்து கடைசியாக வெளியான ஹரிஹர வீர மல்லு திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஓஜி திரைப்படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன விமர்சனம் வழங்கியிருக்கிறார்கள் என பார்க்கலாம்.

Continues below advertisement

ஓஜி திரைப்பட விமர்சனம் 

"மும்பையின் மிகப்பெரிய கேங்ஸ்டரான பவன் கல்யாண் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டு படத்தின் வில்லனை அழிக்க மீண்டும் மும்பைக்கு வருவதே ஓஜி படத்தின் கதை. வழக்கமான ஒரு கேங்ஸ்டர் படமாக தொடங்கி ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றன. முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் பெரியளவில் சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை என்றாலும் இடைவேளைக் காட்சி மிக சிறப்பாக அமைந்துள்ளது. பவன் கல்யாணின் அறிமுக காட்சி மற்றும் இடைவேளை காட்சி சூப்பர். தமனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இருப்பினும், இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை, ஒன்றன் பின் ஒன்று பில்டப் காட்சிகள் இடம்பெறுகின்றன. படத்தில் பல கதாபாத்திரங்கள் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. படத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், படத்தில் எதுவுமே நடக்கவில்லை என்றாலும் கூட  கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியும் நாயகனான பவன் கல்யாணுக்கு எலிவேஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இயக்குநர் சுஜீத் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக காட்சிகளை உருவாக்கியிருந்தாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் சுத்தமாக இல்லை. பவன் கல்யாண் சமீபத்தில் நடித்த படங்களில் அவரை மிக சிறப்பாக ஓஜி திரைப்படம் காட்சிபடுத்தியிருக்கிறது. மொத்த படத்திற்கும் தமனின் பின்னணி இசை உயிர் நாடியாக இருக்கிறது. மற்றபடி ஒரு அரைவேக்காட்டு படமாக உருவாகியுள்ளது பவன் கல்யாணி ஓஜி திரைப்படம் " என விமர்சகர் ஒருவர் படத்தைப் பற்றி கூறியுள்ளார். 

Continues below advertisement