Pawan Kalyan: பிறந்தநாளில் வாள் தூக்கி நிற்கும் பவன் கல்யாண்.. இணையத்தைக் கலக்கும் ‘ஓ.ஜி’ க்ளிம்ஸ் வீடியோ!

நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ஓ. ஜி. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

 நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ஓ. ஜி. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தெலுங்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பவன் கல்யாண், சமீபத்தில் நடித்து வெளியான ‘ப்ரோ’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்,  இன்று பவன் கல்யாணின் 52 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் படம் ஓ.ஜி. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஓ.ஜி

பிரபாஸ் நடித்து வெளியான மிகப்பெரிய  பான் இந்திய திரைப்படமாக வெளிவந்த ‘சாஹோ’ திரைப்படத்தை  இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்குகிறார். டி.வி.வி தானய்யா இந்தப் படத்தை தயாரிக்க, தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட இந்த முன்னோட்ட வீடியோவில் பவன் கல்யாண் இதுவரை இல்லாத அளவிற்கு மாஸான கேங்ஸ்டராக காணப்படுகிறார். பம்பாயை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜூன் தாஸின் குரலில் அமைந்துள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் பவன் கல்யாணுக்கு ஒரு சிறந்த பரிசாக அமைந்திருக்கிறது.

மேலும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக தென் இந்திய சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஹரி ஹர வீர மல்லு

பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் மற்றொரு படமான ஹரிஹர வீர மல்லு படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்கும் இந்தப் படத்தில் முகலாய அரசரான ஔரங்கசிப் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்து  வருகிறார். மேலும் நிதி அகர்வால், அர்ஜூன் ராம்பால், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இதில் நடிக்க இருக்கிறார்கள்.  

Continues below advertisement