ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீட்ல் நிறுவனம் தனக்கான இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சீரான இடைவெளியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மிடில்வெயிட் செக்மெண்டில் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. அந்த வரிசையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய புல்லட் 350 மாடல் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் இதற்கான விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசைனில் மாற்றம்:


புதிய புல்லட் 350 மாடலில் டிசைனில் மட்டுமே பெருமளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முன்புறத்தில் சற்றே நீளமான ஃபெண்டர், டேன்க் வடிவம் சற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றமும் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட முகப்பு விளக்கு, க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள் மற்றும் பழையபடி பாரம்பரியம் மிக்க வடிவமைப்பே புதிய மாடலிலும் இடம்பெற்றுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


புதிய புல்லட் 350 மாடல் மோட்டார்சைக்கிளிலும் ஹண்டர் 350, மீடியோர் 350 மற்றும் கிளாசிக் 350,மாடல்களில் வழங்கப்பட்ட 349சிசி, சிங்கில் சிலிண்டர் jஈ சீரிஸ் இன்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது. 20.2 ஹெச்.பி. பவர் மற்றும் 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 


சிறப்பம்சங்கள்:


இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜி- அனலாக் டிஸ்பிளே, ஒற்றை இருக்கை வசதி, அலாய் வீல்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.


விலை விவரங்கள்:


புதிய புல்லட் 350 மாடலின் தொடக்க விலை இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 562 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிலிட்டரி ரெட் மற்றும் மிலிட்டரி கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.  ரேஞ்ச் வேரியண்ட் மெரூன் மற்றும் ஸ்டேண்டர்ட் கருப்பு நிறத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 436 ரூபாய்க்கும்,  டாப் எண்ட் வேர்யண்ட் பிளாக் கோல்ட் நிறத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 801 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலில் தொடக்க விலை என்பது கிளாசிக் 350 மாடலை காட்டிலும் 19 ஆயிரம் ரூபாய் குறைவாகவும், ஹண்டர் 350 மாடலை விட 24 ஆயிரம் ரூபாய் அதிகமாகவும் உள்ளது.  


Car loan Information:

Calculate Car Loan EMI