நடிகர் சிம்பு நடிக்கும் "பத்துதல" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் விவரம் மற்றும் படம் குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


 




'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா தற்போது நடிகர் சிம்புவை இயக்கும் திரைப்படம் "பத்துதல". இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் மற்றும் காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிக்கு ஹைதராபாத்தில் முடிவடைந்து அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது.  இப்படத்தின் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குளிர்ச்சியடைய செய்து வருகிறது. 


 






 


ரீ மேக் திரைப்படம் :


கன்னட திரையுலகில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற "மஃப்டி" படத்தின் தமிழ் ரீ மேக் திரைப்படமாக உருவாகிவரும் "பத்துதல" திரைப்படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளாராம் இயக்குனர். இது முழுக்க முழுக்க ரீ மேக் திரைப்படமாக இல்லாமல் நடிகர் சிம்புவின்  திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் கிருஷ்ணா. 


 







பத்துதல படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் :
 
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'பத்துதல' படம் வரும் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி சற்று ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படக்குழுவினர் வெளியிட்ட தகவலின் படி இப்படம் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் கார்த்திக், அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி, டீஜெ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார்.  


 
"மாநாடு" மற்றும் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "பத்துதல" படத்திற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2023ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது எனினும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.