பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்ட பலரின் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் 'தங்கலான்'. கோலார் தங்க வயல் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் முதல் நாள் முதலே நல்ல வசூலை ஈட்டி வருவதுடன் பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக பார்வதி நடித்து இருந்தார். 'தங்கலான்' படக்குழுவினர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய விருப்பம் குறித்து பகிர்ந்து இருந்தார்.
விக்ரம் உடன் ரொமான்டிக் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது என பார்வதி சொல்ல அதற்கு பதில் பதில் அளித்த விக்ரம் "உங்களுக்கு விக்ரம் ரொமான்ஸ் செய்யும் படத்தை பார்க்க வேண்டுமா? அப்போ தங்கலான் பாருங்க. அதில் விக்ரமுக்கு 5 குழந்தைகள் இருப்பார்கள். முதல் குழந்தையே ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு 24 வயசு. கடைசி குழந்தைக்கு மூன்று வயசு தான். கணவன் - மனைவிக்குள் இருக்கும் ரொமான்ஸ் மிகவும் உணர்ச்சிகரமானதாக வன்முறை நிறைந்த பழமையான ஆழமான ரொமான்ஸ் என்றாலும் அது மிகவும் ரா வாக இருந்தது. அந்த ரொமான்ஸ் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எதற்காக இன்னொரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க வேண்டும் என பார்வதி சொல்றாங்க என எனக்கு தெரியல. அவங்களுக்கு கூல் ரொமான்ஸ் செய்வது போல யோ - யோ போன்ற ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் போல என ஜாலியாக பதில் அளித்து இருந்தார் விக்ரம்.