துப்பட்டாவில் தேசிய கொடி... சிக்கித் தவிக்கும் அஜித் பட நாயகி!

நடிகையின் துப்பட்டாவில் தேசிய கொடியின் நிறம் அச்சிடப்பட்டிருந்தது தான், தற்போது அவருக்கு எதிரான பதிவுகளுக்கு காரணமானது.

Continues below advertisement

மலையாள நடிகையான பார்வதி நாயர், தமிழில் நிமிர்ந்து நில் படம் மூலம் அறிமுகமானவர். உன்னை அறிந்தால், உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பார்வதி, இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பதிவுகள் போடுபவர். சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று அவர் ஒரு பதிவு செய்திருந்தார். அதில் மூவர்ண நிறத்தில் உள்ள தனது துப்பட்டாவை பறக்கவிட்டவாறு சுதந்திர தின வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருந்தார், கடந்த ஆண்டும் இதே போட்டோவை அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பார்வதி, தேசியக் கொடியை அவமதித்து துப்பட்டாவாக அணிந்ததாக கூறி அவரது பதில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் பழைய படத்தை மீண்டும் தூசி தட்டி பார்வதி பதிவு செய்துள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர். இதோ பார்வதியின் பதிவும் அதற்கு வந்த எதிர்வினைகளும்....

Continues below advertisement

 

பார்வதி நாயரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தை கிண்டலாக அவருக்கு ரீட்விட் செய்து வருகின்றனர்.

Continues below advertisement