தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2007ம் ஆண்டு பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பருத்திவீரன் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இந்தபடம் அன்றைய தமிழ் சினிமாவில் கிராமப்படங்களை நோக்கி கோலிவுட்டை மீண்டும் அழைத்துச் சென்றது. இந்த நிலையில், பருத்திவீரன் வெளியாக 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அந்த படத்தின் மூலமாக எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியதை நான் பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. எல்லாப்புகழும் அவரையே சாரும்.






 


கற்றுக்கொண்ட பல பாடங்களில், நான் செய்யும் வேலையில் மூழ்கி மகிழ்வதற்கு அவர் எனக்கு கற்றுக்கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாக கருதுகிறேன். இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற அமீர் சார், ஞானவேல், அண்ணா, எனது அன்பிற்குரிய ரசிகர்கள் மற்றும் ஊகடத்தினருக்கு நன்றி.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




பருத்திவீரன் படம் மூலமாக தொடங்கிய கார்த்தியின் நடிப்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் படம் அந்தாண்டு 365 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் உருவாகிய இந்த படத்தில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் கிராமியப் பின்னணியில் உருவாகிய அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் கார்த்தி இதுவரை ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் என்று இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண