பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன் அந்த படத்திற்காக வந்த வாய்ப்புகள் பற்றியும் எப்படி சின்ன பழுவேட்டரையராக மாறினார் என்பது பற்றியும் பேசி உள்ளார்.


பொன்னியின் செல்வன் - 1


கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சின்ன பழுவேட்டரையராக நடிகர் இயக்குனர் பார்த்திபன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பார்த்திபன் அவரது கதாபாத்திரம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.



நான்தான் பொன்னியின் செல்வனா?


உங்களை எல்லாரும் பொன்னியின் செல்வனாகவே பாத்துட்டாங்களே என்று கேட்கையில், "ஆயிரத்தில் ஒருவன் ஒரு காரணம். நான் படம் வெளியாகி தஞ்சாவூர் போனா ராஜராஜ சோழன் வந்துட்டாருன்னு தான் சொன்னாங்க. அது ஒரு கடல். இனிமே அதுல நீந்த முடியுமான்னு  கூட தெரியல. எனக்குமே தோணும் இவ்வளவு பேருக்கு பிறகு, என் பேரு வருது இதுலன்னு வருத்தமாதான் இருந்துச்சு, சின்ன கதாபாத்திரம் தான் பண்றோம்னு தோணுச்சு. ஆனா என் கதாபாத்திரம் வர்ற சீன்ஸ் ரொம்ப அழகா இருக்கும். எனக்காக நாவல்ல இல்லாத ஒரு சீன் கூட சேர்த்திருக்கார் மணி சார். என்னை திருப்தி படுத்துவதற்காக இருக்கலாம்" என்றார். 


தொடர்புடைய செய்திகள்: அன்று தோனி ரோகித்திற்கு செய்ததை இன்று ரோகித் பண்டிற்கு செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபரின் வைரல் ட்வீட்


மணி சார் கூப்பிட்டு வேணாம்னு சொன்னேன்!


இந்த பட வாய்ப்பு பற்றி பேசுகையில், "இந்த படத்துல நான் நடிச்சது மூன்றாவது முறையா எனக்கு வந்த வாய்ப்புலதான். முதல் முறை என்ன மணி சார் கேக்கும்போது என்னால பண்ண முடியல, தேதிகள் காரணமா. ரெண்டாவது முறையும் அழைப்பு வருது, மறுபடியும் முடியல. ஆனா அப்புறம் பெருமையா சொல்லிக்க ஆரம்பிச்சுட்டேன், மணி சார் கூப்பிட்டு என்னால நடிக்கப்போக முடியாத அளவுக்கு பிஸியா இருக்கேன்னு. அந்த பெருமையை உடைக்க மூணாவது முறையா சான்ஸ் வருது, இதையாவது பண்ணனும்னு சொல்லி, சின்ன பழுவேட்டரையர் கேரக்டர் சொல்றாங்க" என்று பேசினார்.



இந்த கேரக்டர் பண்ணதுல வருத்தம்தான்!


மேலும் பேசிய அவர், "அவ்வளவு பெரிய இடத்துக்கு நாம வளந்துருக்கோமான்னு பெருமைப்பட்டுக்கிட்டு ஓகேன்னு சொல்லிட்டேன். உங்களுக்கு தகுந்த டேட்ஸ்ல வாங்க வந்து நடிச்சு கொடுத்துட்டு போங்கன்னு சொல்றாங்க. நானும் போறேன். அங்க டைரக்டர்னா இப்படித்தான் இருக்கணும்னு காட்றார். அவ்வளவு மரியாதை, அவ்வளவு கூட்டத்தை வச்சு ஒரு நாளைக்கு 3 ஸீன் எடுக்குறார். அவரால மட்டும்தான் முடியும். ஐஸ்வர்யாலாம் பொம்மை மாதிரி நிக்கிறாங்க. டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு, கீ கொடுத்தா அசையுற அளவுக்கு ரெடியா நிக்கிறாங்க. மொத்த செட்டே அவர் கண்ட்ரோல்ல இருக்கு.


நான்லாம் சின்ன வயசுல ஒரு பென்சிலை சீவி ரெடியாகி கிளாஸ்ரூம்ல போய் உக்கார்ற மாதிரி ரெடியா போவேன். நான் என் அசிஸ்டண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன், ஒரே ஒரு நாள் மணி சார் ஆபீஸ் பக்கம் போய் பாத்துட்டு வாங்கடா எவ்வளவு மரியாதை இருக்குன்னு. அதை பண்ண மாட்றீங்கன்னு திட்டினேன்", என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்