தமிழ் சினிமாவில் அசாத்திய திறமை படைத்த, எந்த கலாட்டத்திலுமே தவிர்க்க முடியாத ஒரு கலைஞனானாக வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் மற்ற படங்களை காட்டிலும் வேறுபட்டு இருப்பது தான் அவரின் தனி சிறப்பு. அந்த வகையில் 2019ம் ஆண்டு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் பல பிரிவுகளின் கீழ் எண்ணற்ற விருதுகளை தட்டி சென்றது. 



இதுவரையில் யாரும் யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு அபூர்வமான சவாலான ஒரு திரைக்கதை. படம் முழுக்க திரையில் தோன்றும் ஒன்லி கதாபாத்திரமாக பார்த்திபன். அவரின் மனைவி, மகன், காவல் நிலை ஆய்வாளர், உயரதிகாரி, பெண் காவலர் என அனைவரும் திரையில் தோன்றாமல் குரல் வழியாக மட்டுமே கற்பனை மூலம் விரிவடைந்து கதை சொல்லிய ஒரு படம். பார்த்திபன் திறமை மொத்தத்தையும் வெளிக்காட்டிய ஓர் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'.  


இப்படம் இந்தியில் பார்த்திபன் இயக்க அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவானது ஆனால் ஒரு சில காரணங்கள் இது வரையில் வெளியாகமேலே இருந்து வருகிறது. அடுத்த கட்டமாக இப்படம் ஹாலிவுட்டில் உருவாக பல ஆண்டுகளாக  பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ஹாலிவுட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது குறித்து தெரிவித்து இருந்தார்.  



"அப்படி நான் ஹாலிவுட் படத்தை பார்த்து பிழைப்புக்காக கதையை திருடி இருந்தேன் என்றால் இதை நான் அங்கே எடுத்து சென்று இருக்க முடியாது. அதில் எனக்கு சந்தோஷம். அந்த படம் ஆரம்பிக்கும்போது பயங்கரமான பயம், நிறைய நஷ்டம், திரையிடுவதில் ஏகப்பட்ட சிக்கல் இப்படி எல்லாத்தையும் மீறி அது வெற்றி படமாக அமைந்தது. இந்தியில் வெளியாகாதது சற்று வருத்தமாக தான் இருக்கிறது என்றாலும் ஹாலிவுட்டில் அதை வெளியிட கிட்டத்தட்ட ஐந்து ஆறு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தற்போது அது நெருங்கி விட்டது. அவர்களின் பட்ஜெட்டில் பண்ண முடியுமா, ஓன்று இரண்டு மாதங்களில்  வேலையை துவக்கலாமா எனும் அளவுக்கு பேச்சுவார்த்தை நெருங்கி விட்டது" என பார்த்திபன் தெரிவித்துள்ளார். 


பாலிவுட் தலைசிறந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டென்செல் ஹேஸ் வாஷிங்டன் - பார்த்திபன் கூட்டணியில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை ரீமேக் செய்யப்படவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.