இயக்குநர் பார்த்திபன் தனது முதல் படமான ‘புதிய பாதை’ தொடங்கி இறுதியாக திரைக்கு வந்த ’ஒத்த செருப்பு’ வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனிப்பாதையை உருவாக்கி வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.
3 சர்வதேச விருதுகள்
முன்னதாக ’ஒத்த செருப்பு’ படம் 2019ஆம் ஆண்டு தேசிய விருது உள்பட பல உலக விருதுகளை வாரிக் குவித்தது. தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கிச் சென்ற பார்த்திபன் தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு முன்னதாக பார்த்திபன் அனுப்பியிருந்த நிலையில், மூன்று சர்வதேச விழாக்களில் ’இரவின் நிழல்’ முன்னதாக வெற்றிபெற்றுள்ளது.
ஒளிப்பதிவாளருக்கு விருது
குறிப்பாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது.
மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் அதிகாரப்பூர்வ தேர்வுப் பட்டியலில் இப்படம் உள்ளது. இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்டுகளித்த திரைப் பிரபலங்கள், இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்