பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நாட்டுப்புற கலைஞர் எம்.தங்கராஜ் நடித்திருந்தார். முன்னதாக, தங்கராஜ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மின்சார வசதியில்லாத வீடு ஒன்றில் வசித்து வந்தார். பின்பு பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவருக்கு, அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று உடல் நலக்குறைவினால் திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Pariyerum Perumal Thangaraj Passes Away : பெரும் சோகம்.. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் மறைவு
குலசேகரன் முனிரத்தினம் | 03 Feb 2023 09:05 AM (IST)
Pariyerum Perumal Thangaraj Passes Away : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் காலமானார்.
மறைந்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ்