ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ படத்தின்ட்ரெய்லரை கோவாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2023)   ZEE5 நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


கடக் சிங் பட ட்ரெய்லர்


அனிருத்தா  ராய் சௌதிரி இயக்கும் இந்த படத்தில் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான்  ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர் 8 2023 அன்று  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த அரசு அலுவலர்கள், பிரமுகர்கள், உச்ச நட்சத்திரங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திரைப்பட ரசிகர்கள் பங்கேற்றனர். 


தேசிய விருது வென்ற இயக்குனர் அனிருத்தா ராய் சௌதிரி இயக்கிய கடக் சிங் திரைப்படத்தை ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து விஸ் ஃபிலிம்ஸ், கேவிஎன், ஹெச்டீ கன்டென்ட் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. 


இந்த படம், கடக் சிங் என்றழைக்கப்பட்ட ஏ.கே.ஷ்ரிவாஸ்தவின் வாழ்க்கையை பற்றியது.  இவர் நிதி சார்ந்த குற்றங்கள் துறையில் இணை இயக்குனராக உள்ளார். மேலும் மறதி நோயுடன் போராடிக்கு கொண்டிருக்கிறார். ஏகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் இந்த திரைப்படம் தொடங்குகிறது. அதேசமயம் அவருடைய கடந்த காலம் பற்றிய முரண்பாடான கதைகள் அவருக்கு சொல்லப்படுகிறது.


கதையிலிருந்து உண்மையை பிரித்து சொல்ல அவர் வற்புறுத்தப்படுகிறார் . பாதி – மறந்த  நினைவுகளுக்கு இடையே, மர்மமான முறையில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்திருப்பதன் பின்னால் மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு நிதி குற்றம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.  அதன் உண்மையைக் கண்டறிய முயல்கிறார். இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துத்தை  மற்றும் இந்த உறவுகள் எப்படி  வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கிறது என்பதை விளக்குவது போல இதன் கதையானது அமைக்கப்பட்டுள்ளது.


படக்குழுவினர் கருத்து


இந்த படம் பற்றி நடிகர் பங்கஜ் த்ரிபாதி கூறுகையில், “கடக் சிங் நான் முன்னதாக நடித்திருக்கும் வேறு எந்த கதையும் போல அல்லாதது. அவர் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரம் மற்றும் அடுக்குகளை கொண்ட இத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. கூடுதலாக, டோனி டா, பார்வதி, ஜெயா மற்றும் இளமையான மற்றும் ஆர்வம் நிறைந்த சஞ்சனா போன்றவர்கள் உட்பட சில நம்பமுடியாத திறமை சாலிகளுடன் வேலை செய்ய முடிந்தது.


அனைவரின் ஒன்றிணைந்த சக்தி மற்றும் பேரார்வம் உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பக்கங்களிலிருந்து ஸ்க்ரீனுக்கு மாற்றியது. மேலும், கடந்த இரவு ஐஎஃப்எஃப்ஐ –ல் ட்ரெய்லரை அறிமுகப்படுத்தியது மற்றும் முதன் முறையாக ட்ரெய்லருக்கான மக்களின் எதிர்வினையை பார்ப்பது மிகுந்த ஆர்வமளித்தது. இங்கே ஐஎஃப்எஃப்ஐ –ல் இந்த திரைப்படத்தையும் திரையிடுகிறோம், அதனால் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என கூறினார். 


தொடர்ந்து பேசிய நடிகை சஞ்சனா சாங்கி கூறுகையில், “முதன் முதலில் கடக் சிங் கதையை ரிதேஷ் ஷா சொன்ன சமயத்திலிருந்து, நாம் பிரத்யேகமான ஏதோ ஒன்றை செய்யப் போகிறோம் என்ற மிக உறுதியான உணர்வு எனக்கு ஏற்பட்டது. புத்திசாலித்தனத்துடன் அது எழுதிப்பட்டிருக்கும் விதத்திற்கு, டோனி தா (அனிருத் ராய் சௌதிரி) மற்றும் விஸ் ஃபிலிம்ஸில் உள்ள அணியினர் அழகாக உயிரூட்டியிருக்கிறார்கள்.


 எனக்கு உத்வேகம் அளிப்பவரான பங்கஜ் தரிப்பாதி எனக்கு அப்பாவாக நடிக்க அவருக்கு எதிராக, அடுக்குகளை கொண்ட மற்றும் சிக்கலான கதாபாத்திரமான சாக்ஷியை கொண்டு வருவதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டது , நடிப்பில் ஒரு முதுநிலை பட்டம் மற்றும் ஆய்வு பட்டம் பெற்றது போல இருந்திருக்கிறது. ட்ரெய்லரை ஐஎஃப்எஃப்ஐ கோவாவில் அறிமுகபடுத்துவது மற்றும் அதைத் தொடர்ந்து உலக அளவிலான முதல் காட்சியை வெளியிடுவதை விட பார்வையாளர்களுக்கு நம்முடைய திரைப்பட்டத்தைக் கொண்டு வருவதற்கான சிறந்த வழியை என்னால் கற்பனை செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.