குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் பல ஹீரோக்களின் கையில் அரவணைப்பாக இருந்த குட்டி தேவதை தான் நடிகை சுஜிதா. இன்று சின்னத்திரையின் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர். சுஜிதா என்ற பெயரையே அனைவரும் மறந்து தனம் என சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார். 


பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் :


விஜய் டிவியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக பல குடும்பங்களின் ஒற்றுமைக்கு காரணமாக இருந்து வரும் சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்க்கும் போது 'ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே' என பலரும் ஏங்கும் அளவிற்கு ரசிகரின் ஃபேவரட் சீரியலாக இருந்து வருகிறது. இந்த ஆலமரத்தின் வேராக இருக்கும் அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை சுஜிதா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் சுஜிதா.  


 



கதகேளு கதகேளு :


சுஜிதா 'கதகேளு கதகேளு' என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதன் மூலம் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் அழகான மாந்தோப்புக்கு சென்று மாங்காய்களை பறிக்கும் வீடியோ ஒன்றை தனது சேனலில் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ஏராளமான  லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


சுஜிதாவின் அழகான மாந்தோப்பு :


சுஜிதா தனது மாந்தோப்புக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சொந்தமாக ஒரு நான்கு ஐந்து மாமரங்கள் உள்ளன. ரூமானி, கிளி மூக்கு மாங்காய், பங்கனப்பள்ளி மாம்பழம் என சில மாமரங்களை வளர்த்து வருகிறார். சுஜிதாவின் மிகவும் ஃபேவரட் பழம் என்றால் அது மாம்பழம் தானாம். பை பையாக மாங்காய்களை எடுத்து கொண்டு அவர் சென்னை திரும்பும் வீடியோ அது. 


 



பேராசை பெருநஷ்டம்:


சுஜிதாவின் ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு குட்டி கதை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த வீடியோவில் பேராசை பெருநஷ்டம் என்ற தலைப்பில் ஒரு கதை ஒன்றை சொல்லி இருந்தார். நமது தகுதிக்கு ஏற்ற படி நமது ஆசைகளை வைத்து கொள்ள வேண்டும் இல்லையேல் அது நமது காலையே வாரி விடும். அதனால் ஏராளமான மாமரங்களை கொண்டு இருந்தால்தான் அது மாந்தோப்பு என்றில்லை. ஆசைக்காக ஒரு நான்கு ஐந்து மரங்கள் இருந்தாலும் அது என்னுடைய மாந்தோப்பு தான் என இந்த வீடியோவை முடித்து இருந்தார்.