விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் வரும் நடிகை சுஜிதா நாளொன்று ரூ.17 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். இவரின் இந்த சம்பளம் மூர்த்தி வாங்கும் சம்பளத்தை விட அதிகமான தொகையாகும்.


சினிமாக்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை சீரியல்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அப்படி கிராமம் முதல் நகரம் வரை என பலதரப்பட்ட ரசிகர்களைக்கொண்ட சீரியல் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான நாள் முதல் இதுவரை மக்கள் மனதில் நம்பர் 1 இடத்தைப்பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அண்ணன்- தம்பி உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, சரவணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.



மூத்த அண்ணன் மூர்த்தி மற்றும் அண்ணி தனம் ஆகிய இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழிநடத்துவதாகக் கதைக்களம் அமைந்துள்ளது. தொடங்கிய நாள் முதல் இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். ரேட்டிங்கில் முதல் இடம் வகித்துவரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள்? என்று நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பள விபரங்கள்:


பாண்டியன் ஸ்டோர்ஸின் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டான் முத்து தன்னுடைய கிராமத்துப் பாங்கான நடிப்பில் மக்களைக் கவர்ந்தவர் என்றுதான் கூறவேண்டும். சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தெக்கத்தி பொண்ணு என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் ஸ்டாலின்.  மேலும் இவர் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினர் இவர். இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பான மதுரை சீரியலில் பிரபலமான இவர் பல்வேறு சினிமாக்களிலும் நடித்துவருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் இவருடைய நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


சமீபத்தில் வெளியான தகவலின் படி பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு நாளொன்று  ரூ. 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். ஆனால் தனம் அண்ணியாக நடிக்கும் சுஜிதாவுக்கு நாளொன்று ரூ.17 ஆயிரம் சம்பளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குபவர் தனம்தான். அண்ணன் மூர்த்தியை விட அதிக சம்பளம் பெறுகிறார் என்ற தகவலும் இதன் மூலம் வெளியாகியுள்ளது.  தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா,  100-க்கும் மேற்பட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹூரோவாக வலம் வரும் கதிருக்கு நாளொன்று ரூ.10 ஆயிரம், அதேபோலவே ஜீவாவிற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் ஹேமாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் மற்றும்  கடைசி தம்பியான கண்ணனுக்கு ரூ.6 அயிரம் சம்பளமாக பெறுகிறார்கள்.  முன்னதாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் மனதைக்கொள்ளைக்கொண்ட விஜே சித்ரா ரூ. 12 ஆயிரம் சம்பளமாக பெற்றார். இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.