பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த துணை நடிகை ரிஹானா பேகம் மீது தொழில் அதிபர் ராஜ் கண்ணன் சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், தன்னிடம் இருந்து ரூ.20 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகை ரிஹானா பேகம் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை பிரபல யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். இதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
யார் அந்த தொழிலதிபர்?
புதிய சிந்தனை என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரிஹானா, கடந்த 2 நாளா ரொம்ப மன வேதனையில் இருக்கேன். நான் ஒருத்தரிடம் இதை சொல்லி புரிய வைக்கிறதை விட, சட்டப்பூர்வமா எதிர்கொள்ள ரெடியா இருக்கேன். இந்த விஷயம் இப்ப நடந்தது இல்லை, 1 வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு. தொழிலதிபர் ராஜ் கண்ணனை எனது தோழி மூலம் தான் முதல் முதலாக அறிமுகம் ஆனேன். அப்போது அவர் எனது தோழியுடன் உறவில் இருந்தார். அப்போது இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்டடது. நான் தான் சமாதானம் செய்து வைத்தேன். தொழிலதிபர் 22 வயதில் தியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த பெண்ணை சட்டப்படி தத்தெடுத்தாரா என்ன என்பது எனக்கு தெரியாது.
லவ் ப்ரோபோஸ்
நான் என் தோழி, தொழிலதிபர், அவருடைய வளர்ப்பு மகள் தியா ஆகிய 4 பேரும் காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது தியாவும், ராஜ் கண்ணனும் காரை விட்டு இறங்கி சென்று விட்டு மறுபடியும் வந்தனர். அவர் சிக்னல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. தியா எனது போன் நம்பரை வாங்கி தொழிலதிபரிடம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் தொழிலதிபர் எனக்கு போன் செய்து என் தோழியை பற்றி குறை கூறினார். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான் அமைதியாக இருந்தேன். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில் அந்த தொழிலதிபர் NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அது பற்றி பேசுவதற்காக நாங்கள் இருவரும் காரில் சென்றபோது காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்குப் பின்னால் அவருடைய வளர்ப்பு மகள் தியா இருந்தாள். காரில் நான் இருந்தபோது தான் எனக்கு மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் செய்தார்.
எல்லா ஆதாரமும் இருக்கு
அதை தியா வீடியோவாக எடுத்தார். மேலும், இந்த மோதிரத்தை கழட்டி விடக்கூடாது, உன்னை போன்ற பெண் எனக்கு தேவை, நான் தனியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நான் 6 மாதம் டைம் கொடுங்க ப்ளீஸ் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்திருக்கிறேன். இதற்கான ஆதாரமும் என்னிடம் இருப்பதாக ரிஹானா தெரிவித்துள்ளார்.
சொந்த உழைப்பில் வாழ்கிறேன்
பயில்வான் ரங்கநாதன் பேசுவது போல, அஜால் குஜால் செய்து நான் பெரிய பங்களாவில் இல்லை, ஒரு சிறிய வீட்டில் தான் இருக்கிறேன். அப்பா இறந்த பிறகு ஓட்டல் நடத்தி வீட்டில் இருந்தே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க தெரிந்த எனக்கு இந்த அவப்பெயர் பேரிடியாக இருக்கிறது. எனது சொந்த காலில் நிற்கிறேன். யாருடைய தயவிலும் இல்லை என தெரிவித்தார். மேலும் தொழிலதிபர் ராஜ் கண்ணனிடம் எனது நகையை அடகு வைத்து கொடுத்து 20 லட்சத்தை இழந்து நிற்பது நான். ராஜ் கண்ணன் தான் என்னை ஏமாற்றிவிட்டார். எனது ஒட்டுமொத்த உழைப்பும் போய் விட்டது என ரிஹானா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.