தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. அவரின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 2010ம் ஆண்டு வெளியான 'பையா' திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்பிள் ஸ்டோரி சூப்பர் ஹிட் வெற்றி :
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி - தமன்னா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் 'பையா'. வழக்கமான ஒரு திரைக்கதை தான் என்றாலும் அதை மக்களின் ரசனைக்கேற்ப மிகவும் அழகாக சிம்பிளாக நகர்த்தியது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. ஹீரோவும் ஹீரோயினுமும் பெங்களுரிலிருந்து மும்பைக்கு பயணம் செய்வதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
13 ஆண்டுகளுக்கு பிறகு பார்ட் 2 :
13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஏரளமான படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ளன. அதில் பல படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன.
செகண்ட் பார்ட் என்றால் இப்படி தானா ?
வழக்கமாக முதல் பாகத்தின் திரைக்கதையை மையமாக வைத்து சில மாற்றங்களை செய்து வேறு நடிகர்களை வைத்து படம் எடுப்பது ஒரு ரகம் என்றால் முதல் பாகத்தின் திரைக்கதையின் தொடர்ச்சியாக சில திரைப்படங்கள் வெளியாவது அடுத்த ரகம். ஒரு சில படங்களில் முதல் பாகத்திற்கு இரண்டாவது பாகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமே இருக்காது.
ஆர்யா - ஜான்வி கபூர் காம்போ :
எனவே பையா 2 திரைப்படத்தின் திரைக்கதை எந்த ரகமாக இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில், பையா 2 படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.