பா ரஞ்சித்


சமூக கருத்துக்களை மையமாக வைத்து தரமான படங்களை இயக்கி வருபவர் பா.ரஞ்சித். திரைப்படங்கள் இயக்குவது தவிர்த்து தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் வழியாக தரமான படங்களையும் தயாரித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தனது தயாரிப்பாளர் பயணத்தை தொடங்கினார் ரஞ்சித் . தொடர்ந்து அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு , சேத்துமான் , குதிரைவால்  , பொம்மை நாயகி , ஜே பேபி , நட்சத்திரம் நகர்கிறது, ப்ளூ ஸ்டார் , ரைட்டர் உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளார். இதில் ரைட்டர் , ஜே பேபி , சேத்துமான் , ப்ளூ ஸ்டார் உள்ளிட்டப் படங்கள் ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன.


பைசன்


தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படம் உருவாகி வருகிறது. இப்படம் தவிர்த்து மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன் இயக்கத்தில் உருவாகும் பாபா புகா  என்கிற படத்தை ரஞ்சித் தயாரித்து வருகிறார். மேலும் அதியன் ஆதிரை இயக்கத்தில் தண்டகாரண்யம் படத்தையும் தயாரித்து வருகிறார். ரஞ்சித்


பாட்டல் ராதா






தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 9 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி மலையாள நடிகர்கள் டொவினோ தாமஸ் , பாசில் ஜோசப் , பார்வதி திருவொத்து , நிமிஷா சஜயன் , ஸ்வேதா மேனன் உள்ளிட்டவர்கள் வெளியிட்டுள்ளார்கள். குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு பாட்டில் ராதா என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தினகரன் சிவலிங்கம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.