இயக்குநர் பா.ரஞ்சித் விக்ரமுடன் இணையும் படம் பற்றி பல விஷயங்களை பேசியிருக்கிறார். 


இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “ படத்தை 3டியில் எடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்- ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்காரர்களும் மைசூர் மாகாணத்தில் இருந்த தமிழர்களும் எல்லோரும் சேர்ந்து தங்கத்தை தேடுவதுதான் கதை. இந்தப்படம் ரசிகர்களுக்கு சுவாரசிய சினிமாவாக இருக்கும். அத்தோடு ஒரு வரலாறை தெரிந்து கொள்ளவும் முடியும். கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதமாக இந்த கதைக்காக வேலை செய்திருக்கிறோம்.






அந்த வரலாறு 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கி  20 ஆம் நூற்றாண்டு மத்தியப்பகுதியில் முடிகிறது. அதன் நீட்சியாக இப்போதும்  அங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதை வைத்து மூன்று நான்கு படங்கள் எடுக்கலாம். நான் இதற்கான ஸ்கிரிப்டை எழுதி முடிக்கும் போது, அது இரண்டு பாகங்களாக வந்தது. அதில் முதல் பாகத்தை மட்டும் வைத்து இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்திருக்கிறேன்.  படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கான கதை ரெடியாக இருக்கிறது.  


 






நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் வெளியாக உள்ளது.