ஆஸ்கருக்கு தேர்வான பாப்பா புக்கா
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் இணைத் தயாரிப்பில், டாக்டர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கியுள்ள ‘பாப்பா புக்கா’(PAPA BUKA) திரைப்படம், முதன்முதலாக பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பில் 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீலம் புரொடக்சன்ஸ் பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.