தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் கலாய்க்க பா. ரஞ்சித். அவரின் அடுத்தடுத்த பாடங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் என்றுமே இருக்கும். அந்த வகையில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. விக்ரம் , பார்வதி திருவொத்து , பசுபதி , மாளவிகா மோகனன் , டேனியல் காலடா கிரோன் , முத்துக்குமார் , ஹரி கிருஷ்ணன், வேட்டை முத்துக்குமார் , அர்ஜூன் , சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மினிக்கி...' பாடலின் ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ப்ரோமோ வீடியோவை தொடர்ந்து தற்போது சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.