இந்த வாரம் ஓடிடியில் சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் தாலி முதல் துல்கர் சல்மான் நடித்திருக்கும் கன்ஸ் & குலாப்ஸ் வரையிலான அதிரடி, திரில்லர் காட்சிகளை கொண்ட வெப் தொடர்கள் ரிலீசாக உள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் ஆதிக்கத்தால் திரையரங்குகளை விட ஓடிடியில் அதிகளவில் படங்கள் வெளியாகின்றன. திரைப்படங்கள் மட்டுமின்றி, வெப் தொடர்கள், ஆவணப்படங்கள், தொலைக்கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்தும் ஓடிடி தளங்களில் போட்டி போட்டு கொண்டு வெளியாகின்றன. ஓடிடியின் எண்ணைக்கையும் அதிகரித்து திரைப்படங்களை போட்டியிட்டு வாங்கி வெளியிடுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புது புது படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிடுவதில் ஓடிடி நிறுவனங்கள் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். 


அதேநேரம் ஓடிடி தளத்தின் வெப்தொடர்கள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் ஓட்டிடியில் ரிலீசாகும் வெப் தொடர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புது வெப் தொடர்கள் ரிலீசாக உள்ளன. 


தாலி: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் திருநங்கையாக நடித்துள்ள புது வெப்தொடர் (Taali) ஜியோ சினிமாவில் இன்று முதல் ரிலீசாகிறது. மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கையுமான ஸ்ரீகவுரி சாவந்த் என்பவரின் வாழ்க்கையை அடைப்படையாக வைத்து எடுக்கப்பட்ட உண்மை கதையில் சுஷ்மிதா சென் நடித்துள்ளார். பிரபல நடிகை திருநங்கையாக நடித்திருப்பதால் தாலி வெப் தொடருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கியுள்ளார்.



மத்தகம்: அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி நடித்திருக்கும் மத்தகம் வெப் தொடர் வரும் 18ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்தில், மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடித்துள்ளார். அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 


கன்ஸ்&குலாப்ஸ்: ராஜ்குமார் ராவ், துல்கர் சல்மான், ஆதர்ஷ் கவுரவ், கௌதம் ஷர்மா, கௌரவ் சர்மா, குல்ஷன் நடித்திருக்கும் வெப் தொடர் கன்ஸ்&குலாப்ஸ் (Guns & Gulaabs). ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே நடித்திருக்கும் இந்த வெப் தொடர் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது.


டேஸ் ஆஃப் எ பேட் மேன்: புலனாய்வு கதையை கொண்ட டேஸ் ஆஃப் எ பேட் மேன் (10 Days of a Bad Man)வெப் தொடர் வரும் 18ம் தேதி நெட்பிளிக்சில் ரிலீசாக உள்ளது. உலுஸ் பைரக்டார் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் கொலையின் பின்னணியை அலசி ஆராயும் கதையை கொண்டந்து. 



தி மங்கி கிங்: அனிமேஷன் தொடரான தி மங்கி கிங் (The Monkey King) இம்மாதம் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது. சீனாவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது.