திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் கூட சிறிது நாட்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆஹா போன்ற ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் வெளியாகி பல நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்ட விக்ரம் படம் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவ்வகையில், ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்டைப் பார்ப்போம்.
ஜூராஸிக் வர்ள்ட் டாமினியன்:
ஜீராஸிக் பார்க் படங்களின் வரிசையில் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் ரிலீஸான படம் ஜூராஸிக் வர்ள்ட் டாமினியன். ஹாலிவுட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பிரபலமான படமான ஜூராஸிக் பார்க் பட சீரிஸின் வரிசையில் வெளியான இப்படம், கடும் நெகடிவ் விமர்சனங்களை எதிர் கொண்டது. 185 மில்லியன் டாலர்களுக்கும் மேலான பொருட்செலவில் பிரம்மாண்ட க்ராஃபிஸ் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இப்படம், பாதிக்கு பாதி வசூலைக் கூட பெறவில்லை என்பது சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குகள்ளாக்கியது. இதனால், நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகின்ற 17 ஆம் தேதி, ஜூராஸிக் வர்ள்ட் டாமினியன் படம் வெளியாகிறது.
தாப்ஸியின் டோபாரா வெளியாவது எப்போது:
தமிழில் ‘வெள்ளாவி’ ஹீரோயினாக அறிமுகமான டாப்சி, பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக உலா வருகிறார். அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் இவர் நடித்த ‘டொபாரா’ படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிராஜ் எனும் ஸ்பேனிஷ் படத்தை தழுவி ஹிந்தியில் எடுக்கப்பட்ட இக்கதை, விமர்சனத்திலும் மக்களின் வரவேற்பிலும் சறுக்கலை சந்தித்தது. சையின்ஸ் பிக்ஷன் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது.
ஆஹாவில் வெளியாகிறது அதர்வாவின் ‘ட்ரிகர்’:
அதர்வா நடிப்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான படம் ட்ரிகர். அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிசந்திரன் நடிக்க, சாம் ஆன்டன் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே, டார்லிங், கூர்கா போன்ற படங்களை எடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், வெளியான 25 நாட்களுக்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம், அக்டோபர் 14ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ப்ளிக்ஸில் ப்ளாக் அவுட்:
பிரபல ஹாலிவுட் இயக்குனர் சாம் மேக்கரோனியின் இயக்கத்தில் உருவான படம் ப்ளாக் அவுட். திடீரென மருத்துவமனையில் கண் விழிக்கும் ஒருவன், தான் யாரென்ற உண்மையைத் தேடி அலையும் கதைதான் படத்தின் மைய்யக்கரு. இந்த படம் அக்டோபர் 12 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
அன்ஸ்டாப்பபள் 2 வித் என் பி கே:
அன்ஸ்டாப்பபள்2 வித் என் பி கே எனும் பெயரில் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நடிகர பாலகிருஷ்ணன் டோலிவுட் திரையுலக பிரபலங்களுடன் கலந்துரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, ராஜமெளலி, அல்லு அரஜூன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி அக்டோபர் 14ஆம் தேதி ஆஹாவில் ஸ்டீம் செய்யப்படுகிறது.
சன் நெக்ஸ்டில் சூப்பர் சீனியர் ஹீரோஸ்:
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர்களான பாக்யராஜ், மனோபாலா, அம்பிகா, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீனியர் ஹீரோஸ். பேரனுக்கும், தாத்தாவிற்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை காமெடி-சென்டிமன்ட் கலந்த வகையில் எமோஷனல் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் குமார் டைரக்டு செய்துள்ளார். சன் நெக்ஸ்ட் தளத்தில் நேரடியாக அக்டோபர் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இளசுகள் விரும்பும் மிஸ் மேட்ச்ட்:
டீனேஜ் வயதினர் விரும்பும் காதல்-ரெமேன்ஸ்-ட்ராமா கதைகளுக்கு பெயர் போன நெட்ப்ளிக்ஸ் மிஸ்மேட்ச்ட் (Mismatched) வெப் சீரிஸின் அடுத்த சீசனை வெளியிடவுள்ளது. பருவ வயதினரிடையே வழக்கமாக வரும் பிரச்சனைகளையும், காதல் தோல்வி-சண்டைகளையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ், இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. ஹிந்தி தொடரான மிஸ்மேட்ச்டின் இரண்டாவது சீசன், அக்டோபர் 14ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது.
நேனு மீக்கூ பாகா கவல்சினவாதினி (Nenu Meeku Baaga Kavalsinavaadini ):
தெலுங்கு திரையுலகில் காதல் ட்ராமாவாக உருவாகியுள்ள படம் நேனு மீக்கூ பாகா கவல்சினவாதினி. ஸ்ரீதர் காதேவின் இயக்கத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது, இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.
ஹாட்ஸ்டாரில் பல்து ஜன்வர்:
மலையாள நடிகர் ஃபகத் பாசிலின் தயாரிப்பில், சங்கீத்தின் இயக்கத்தில் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியான படம் பல்து ஜன்வர். மிருகங்களையும், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் கால் நடை மருத்துவரையும் சுற்று சுழலும் இக்கதை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிங் ஃபிஷ்:
கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கிங் ஃபிஷ். அனூப் மேனன் நடித்து இயக்கிய இப்படம், சாதாரண ரிவெஞ்ச் கதையாக உள்ளதாக விமர்சனங்களை பெற்றது. இந்த படம், சன் நெக்ஸ்ட் தளத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது.