OTT Release: Heart Beat: மத்தகம், லேபிள் வரிசையில் புதிய ஹாட்ஸ்டார் தொடர்: ஹார்ட் பீட் சீரிஸ் வெளியானது!

மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.

Continues below advertisement

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் தொடயுள்ளது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

மருத்துவமனை பின்னணியில் இளமையான காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக, இந்த சீரிஸ் ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் என முன்னதாக சீரிஸ் குழு தெரிவித்திருந்தது. மேலும், மருத்துவர்களின் வாழ்க்கை, மருத்துவமனை சூழல் ஆகியவற்றை மையப்படுத்தி சீரியஸ் கதைக்களைத்தைக் கொண்டிருந்தாலும் ஜாலியான எண்டெர்டெய்ன் செய்யும் என்றும் தெரிவித்திருந்தது

அதேபோல், மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு சேர்ந்த மருத்துவர் ரீனா எனும் கதாபாத்திரம்  ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தன் வாழ்க்கையில் நான்கு உலகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

'எ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள ஹார்ட் பீட் தொடர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola