ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம், ஆஸ்கர் விருது பெற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. பாகுபலி அளவுக்கு படம் அமையவில்லை என்றாலும்,  பாக்ஸ் ஆஃபிஸில் பயங்கர வசூல் செய்த பின் இது நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பானது. 


பான் இந்திய நடிகர்களை சினி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ பிரபலபடுத்தினார். ஆர்ஆர்ஆர் படத்தில் கொமாராம் பீம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி தனக்கு கொடுத்த வாய்பினை பயன்படுத்தி கொண்டார். ராஜமெளலி நடிகர் ராம் சரணை வைத்து, மாவீரன் படத்தை இயக்கினார். அதற்கு பின்னர் இருவரும் இப்படம் மூலம் மீண்டும் இணைந்தனர்.






தற்போது இப்படம், ஆஸ்கர் விருது பெற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒன்று இரண்டு பிரிவுகளில் பரிந்துறைக்கப்பட்டால் பரவாயில்லை. இப்படத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 






ஆஸ்கர் விருது பெற பரிந்துரை செய்ப்பட்ட பிரிவுகளின் பட்டியல் :  


சிறந்த இயக்குநர் (ராஜமெளலி)


சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்)


சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்)


சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு)


சிறந்த பின்னணி இசை (கீரவாணி)


சிறந்த பட தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்)


சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே)


சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்)


சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்)


சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்)


சிறந்த தயாரிப்பு (சபு சிரில்)


சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி)


சிறந்த  சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி )


சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்) 


ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடதக்கது