ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றியும், இவற்றில் எது விருதை பெறும் என்பது பற்றியும் கணிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி காணலாம். 


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இது இந்திய நேரப்படி மார்ச் 13 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி தொடங்கும். 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள நிலையில் இம்முறை இந்தியாவில் இருந்து 2 படங்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 


Oscar.com மற்றும் Oscars.org எனும் இணையதள பக்கங்களிலும், அகாடெமியின் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.


டாக்குமெண்டரி குறும்படம் 


The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate இந்த 5 படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் The Elephant Whisperers அல்லது Stranger at the Gate  படம் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட The Elephant Whisperers படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த படம் 


இந்த பிரிவில் All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Banshees of Inisherin, Elvis, Everything Everywhere All at Once, The Fabelmans,Tár,Top Gun: Maverick, Triangle of Sadness Women Talking ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் “Everything Everywhere All at Once” படம் நிச்சயம் விருது பெறும் என சொல்லப்படுகிறது. 


சிறந்த இயக்குநர் 


சிறந்த இயக்குநருக்கான பிரிவில் Martin McDonagh (The Banshees of Inisherin),Daniel Kwan and Daniel Scheinert (Everything Everywhere All at Once), Steven Spielberg (The Fabelmans), Todd Field (Tar),Ruben ostlund (Triangle of Sadness) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் Everything Everywhere All at Once படத்திற்காக Daniel Kwan  மற்றும் Scheinert விருது பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. 


சிறந்த நடிகை 


Cate Blanchett (Tar), Ana de Armas(Blonde), Andrea Riseborough (To Leslie), Michelle Williams (The Fabelmans), Michelle Yeoh (Everything Everywhere All at Once) ஆகிய நடிகைகளில் Michelle Yeoh அதிகம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த நடிகர்


Austin Butler (Elvis), Colin Farrell (The Banshees of Inisherin), Brendan Fraser (The Whale), Paul Mescal (Aftersun), Bill Nighy (Living) ஆகியோரில் சிறந்த நடிகராக Austin Butler-க்கு விருது கிடைக்கவே வாய்ப்புள்ளது. 


சிறந்த துணை நடிகை 


Angela Bassett (Black Panther: Wakanda Forever), Hong Chau (The Whale), Kerry Condon (The Banshees of Inisherin), Jamie Lee Curtis (Everything Everywhere All at Once), Stephanie Hsu (Everything Everywhere All at Once) ஆகியோர் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இதில் Kerry Condon விருது வாங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த துணை நடிகர் 


Brendan Gleeson (The Banshees of Inisherin), Brian Tyree Henry (Causeway), Judd Hirsch (The Fabelmans), Barry Keoghan (The Banshees of Inisherin), Ke Huy Quan (Everything Everywhere All at Once) ஆகியோரில் சிறந்த துணை நடிகராக Ke Huy Quan தேர்வு செய்யப்படலாம் என ரசிகர்கள் கணித்துள்ளனர். 


சிறந்த பாடல் 


Applause (Tell It Like a Woman), Hold My Hand (Top Gun: Maverick), Lift Me Up (Black Panther: Wakanda Forever), Naatu Naatu (RRR), This Is a Life (Everything Everywhere All at Once) ஆகிய 5 பாடல்களில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு (Naatu Naatu) பாடல் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சிறந்த காட்சியமைப்பு 


All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Black Panther: Wakanda Forever,Top Gun: Maverick ஆகிய 5 படங்களில்  Avatar: The Way of Water படம் விருது வெல்ல அதிக வாய்ப்புள்ளது.