ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது


மேலும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒளிவு மறைவுமின்றி மக்களிடம் எடுத்து வைத்தது. இந்தப் படம் ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு சர்வதேச சாதனைகளை படம் படைத்தது. 


ஜெய்பீம் செய்த சாதனைகளில் உச்சபட்சமாக ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் படத்தின் காட்சிகளும், படத்தின் இயக்குநர் ஞானவேலுவின் பேட்டியும் இடம்பெற்றன. இதனையடுத்து ஜெய் பீம் படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர்.






இந்நிலையில், இந்தப் படம் ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ஜெய்பீம் படம் மட்டுமின்றி ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மரைக்காயர் படமும் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளது.




இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் சர்வதேச அளவில் 276 படங்கள் . இந்தப் படங்களுக்கான வாக்கெடுப்பு வரும் 27ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி ஒன்றாம் தேதிவரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டில் இந்த வாக்கெடுப்பு காலமானது கொரோனா காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நாமினேஷன் அறிவிக்கப்படும். வரும் மார்ச் 27ஆம் தேதி விருது வழங்கும் விழா ஹாலிவுட்டின் டோல்பை திரையரங்கில் நடைபெறும். ஆஸ்கர் ரேஸில் ஜெய் பீம் இணைந்திருப்பது சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ட்விட்டரில், #JaiBhimjoinsOSCARS என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்