உலகளவில் சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,94வது அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான பெயர்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 


தொகுப்பாளர்கள் :


94வது ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியை நடிகை டிரேசி எல்லிஸ் ராஸ் மற்றும் நடிகர் லெஸ்லி ஜோர்டன் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். 


 







சிறந்த ஒளிப்பதிவு:


டூன், நைட்மேர் அலே, தி ட்ராஜெடி ஆஃப் மக்பத், நைட்மேர் அலே, வெஸ்ட் சைட் ஸ்டோரி


சர்வதேச திரைப்படம்:


தி ஹன்ட் ஆப் காஃட், லுனானா: ஏ யார்க் இன் தி கிளாஸ்ரூம், தி வொர்ஸ்ட் பெர்சன் இன் தி வோர்ல்ட், டிரைவ் மை கார்,பீலி


சிறந்த படம்:






பெல்ஃபாஸ்ட், கோடா, டோன்ட் லுக் அப், டிரைவ் மை கார், டூன், கிங் ரிச்சர்ட், லைகோரைஸ் பிஸ்ஸா, நைட்மேர் அலே, தி பவர் ஆஃப் தி டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி


சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:


டூன், ஃப்ரீ கை, ஷாங்-சி மற்றும் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்


சிறந்த இயக்குநர்:


பால் தாமஸ் ஆண்டர்சன் (லைகோரைஸ் பிஸ்ஸா)


கென்னத் பிரானாக் (பெல்ஃபாஸ்ட்)


ஜேன் கேம்பியன் (நாயின் சக்தி)


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (மேற்குப் பக்கக் கதை)


Ryusuke Hamaguchi (எனது காரை ஓட்டுங்கள்)


சிறந்த நடிகை:


ஜெசிகா சாஸ்டெய்ன் (தி ஐஸ் ஆப் டாமி ஃபேயி)


ஒலிவியா கோல்மன் (தி லாஸ்ட் டாட்டர்)


பெனெலோப் குரூஸ் (இணை தாய்மார்கள்)


நிக்கோல் கிட்மேன் (பீயிங் ரிக்கார்டோஸ்)


கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (ஸ்பென்சர்)


சிறந்த நடிகர்:


ஜேவியர் பார்டெம் (பீயிங் ரிக்கார்டோஸ்)


பெனடிக்ட் கம்பெர்பாட்ச் (தி பவர் ஆப் டாக்)


ஆண்ட்ரூ கார்பீல்ட் (டிக், டிக் ... பூம்!)


வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்)


டென்சல் வாஷிங்டன் (தி டிராஜிடி ஆப் மெக்பத்)


ஜெய்பீம் திரைப்படம் : 


நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த அயல்மொழித் திரைப்படம் பிரிவில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பிரிவுகளிலும் இடம்பெறாமல் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறியது.