Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனாலும் படம் தொடர்பான பரபரப்பு இன்றும் குறையவில்லை.  இந்நிலையில் ஆஸ்கர் ரேஸில் ஜெய்பீம் வெற்றிபெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.


ஆஸ்கர் விழா..


2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழா மார்ச் மார்ச் 31ம் தேதி நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதன் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை தற்போது வெளியானது. அதில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஜெய்பீம் படம் இவ்வளவு தூரம் பயணித்ததே பெருமையான விஷயம் என்றும், நாம் முயற்சி செய்தோம். அவ்வளவுதான் என்றும் மீம்ஸ்களை பகிர்ந்து பலரும் ஆறுதல் பதிவிட்டு வருகின்றனர். இன்னைக்கு போனா என்ன,, எதிர்காலத்துல வாங்குவோம் என்ற ஊக்கமான வார்த்தைகளும் ட்விட்டரில் நிரம்பி வருகின்றன.


 














ஜெய்பீம்..


ஜெய்பீம் படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்தார் சூர்யா. ஒவ்வொரு சீனிலும் சூர்யா பேசும் அழுத்தமான வசனங்கள் பார்ப்பவருக்கும் மெய் சிலிர்ப்பை உண்டாக்கும். ஒரு பக்கம் பாராட்டு குவிந்ததாலும் விமர்சனத்துக்கும் பஞ்சம் இல்லாமல் சர்ச்சையில் சிக்கியது படம்.  


படம் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களையும் சென்று சேர்ந்து வருகிறது. ஜெய்பீம் படத்தை நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் வட இந்தியாவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது அதற்கு ஒரு உதாரணம். இப்போது திரைப்பட கவுரவமாக பார்க்கப்படும் ஆஸ்கர் கம்யூனிட்டி ஜெய்பீமை கவுரவம் செய்தது. இது மட்டுமன்றி, ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான வீடியோவும் பதிவேற்றம செய்யப்பட்டது.  


இதனிடையே, ஜெய்பீம் திரைப்படம்  படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.   


வென்ற விருதுகளின் விவரம்:-


சிறந்த படம் - ஜெய்பீம் 


சிறந்த நடிகர் - சூர்யா 


சிறந்த நடிகை -  லிஜோமோல் ஜோஸ்


இன்று நடைபெற்ற 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது