93 வது அகாடமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் மிக கோலாகலமாக நடைபெற்றது . கொரோனா பாதிப்பால் இம்முறை ஆடியன்ஸ் இல்லாமல் , ஹோஸ்ட் இல்லாமல் விழா நடத்தப்பட்டது . நோமேட்லேண்ட் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதை அமெரிக்காவின் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார். இதன் மூலம் நிறத்தால் ஒடுக்கப்பட்ட முதல் பெண் இயக்குநர் இந்த விருதை பெற்றுள்ளார் என்கிற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
இதே போன்று பல கலைஞர்களும் இந்த விருதினை தட்டி சென்றுள்ளனர் .
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/lRbfMvLO118" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
இந்நிலையில் " இன் மெமோரியம் பிரிவில்" இந்திய நடிகர் இர்பான் கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா புகைப்படமும் இடம் பெற்றுள்ளது . "லைப் ஆப் பை " " ஜுராசிக் வேர்ல்ட் " இன்ஃபெர்னோ" மற்றும் சில படங்களில் சப்போர்டிங் ரோலில் நடித்துள்ளார் இர்பான் . பானு 1982 ஆம் ஆண்டில் காந்திக்கான சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதை வென்றவர் .
ஸ்லம்டாக் மில்லியனரில் இர்ஃபானுடன் நடித்த நடிகர் ஃப்ரீடா பிண்டோ கூறுகையில்ல "இர்ஃபான் கானைப் போல் யாரையும் நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு கலைஞர், நடிகர் - அவரது நடிப்பின் வடிவங்கள் அனைத்திலும் மனிதகுலத்தை அதிகம் சித்தரிப்பார் . அவரைப் பற்றிய ஆழமான அபிமானத்தை மட்டுமல்ல, நான் உள்ளுணர்வாக விரும்பினேன். என் வாழ்க்கையிலும் அவரின் தடங்களை நான் பின்பற்றுவேன் , "என்று அவரின் மெமோரியம் பிரிவில் எழுதி இருந்தார் .
கடந்த ஆண்டு இர்பானின் மறைவுக்கு பிறகு அகாடமி அவருக்கு தங்களின் அஞ்சலியை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது " பாலிவுடின் மிக பெரிய நடிகர் , சிலம்டாக் மில்லினியர், லைப் ஆப் பை படத்தில் தனது நடிப்பின் திறமையை அனைவருக்கும் காட்டிய பெரிய நடிகர் , இந்த மேடை இந்த சினிமா அவர் இன்மையை உணரும் " என்று அகாடமி விருது அவரை பாராட்டியது . கடந்த ஆண்டு கொரோனா 'நம்பிக்கை' பற்றிய வீடியோ மாண்டேஜிலும், வைரஸ் விழிப்புணர்வு பற்றி எடுத்த மாண்டாஜ் விடியோவிலும் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
இவர்களுடன் சேர்ந்து மற்ற நடிகர்களான மேக்ஸ் வான் சிடோ, சீன் கோனரி, டயானா ரிக், ஹெலன் மெக்ரோரி மற்றும் சாட்விக் போஸ்மேன் மற்றும் பலர் இன் மெமோரியம் பிரிவில் நினைவு கூறப்பட்டது .