Oppenheimer,the killer of the flower moon, பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் (The 96th Academy Awards) விருதிற்கு பரிந்துறைக்கபட்டுள்ளது. 


வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.




ஆஸ்கர் விருது விழா- 2024


96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


ஓபன்ஹைமர் (oppenheimer)


கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்திருந்தார். புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்றது.


ஓபன்ஹைமர்  13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த கதாநாயகன் பிரிவில் நடித்த சிலின் முர்பி (Cillian Murphy), சிறந்த துணை கதாபாத்திரம் நடிகை பிரிவில் எமிலி ப்ளண்ட் ( Emily Blunt), அயர்ன் -மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் ட்வுனி ஜூனியர் (Robert Downey Jr) உள்ளிட்ட பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.


சிறந்த இயக்குநர், சிறந்த Adapted திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த தயாரிப்பு கலை, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஓபன்ஹைமர் இடம்பெற்றுள்ளது.




சிறந்த திரைப்படம் 



  • அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)

  • அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall)

  • பார்பி (Barbie)

  • தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

  • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  • மாஸ்ட்ரோ (Maestro)

  • ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives)

  • புவர் திங்ஸ் (Poor Things)

  • The Zone of Interest




சிறந்த நடிகர்



  • ப்ராட்லி கூப்பர் (Bradley Cooper) -  மாஸ்ட்ரோ (Maestro)

  • கால்மென் டாமிங்கோ ( Colman Domingo) - ரஸ்டின் (Rustin)

  • பால் கியாமாட்டி (Paul Giamatti) - தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

  • சிலியன் முர்பி (Cillian Murphy )-  ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • ஜெஃப்ரெ ரைட் (Jeffrey Wright) -  அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)


சிறந்த நடிகை



  • ஆன்டே பெனிங் (Annette Bening - நைட் (Nyad)

  • லில்லி க்ளாட்ஸ்டோன் (Lily Gladstone) - கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  • சான்ரா ஹூலர் (Sandra Huller) - அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall)

  • காரே முலிகன் (Carey Mulligan) - மாஸ்ட்ரோ (Maestro)

  • எம்மா ஸ்டோன் (Emma Stone) - புவர் திங்க்ஸ் (Poor Things)


சிறந்த துணை நடிகை ( Best supporting actress )



  • எமிலி ப்ளண்ட் (Emily Blunt) - ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • டேனினர் ப்ரூக்ஸ் (Danielle Brooks) - தி கலர் பர்பிள்( The Color Purple)

  • அமெரிக்க ஃபெராரே (America Ferrera)- பார்பி (Barbie)

  • ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster) - நைட் (Nyad)

  • டா வின் ஜாய் ரான்டால்ஃப் (Da'Vine Joy Randolph) - தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)




சிறந்த துணை நடிகர் ( Best supporting actor)



  • ஸ்டர்லிங் கே ப்ரவுன் (Sterling K Brown)- அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)

  • ராபர்ட் டி நிரோ (Robert De Niro)- கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  • ராபர்ட் ட்வுனி ஜூனியர் (Robert Downey Jr) - ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • ரையான் கோஸ்லிங் (Ryan Gosling) - பார்பி (Barbie)

  • மார்க் ரஃபல்லோ (Mark Ruffalo) - புவர் திங்க்ஸ் (Poor Things)


சிறந்த இயக்குநர்



  • அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall) - ஜஸ்டின் ரைட் (Justine Triet)

  • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon) -  மார்ட்டின் ஸ்கார்சீஸ் ( Martin Scorsese)

  • ஓபன்ஹைமர் ( Oppenheimer) - கிறிஸ்ஃடோபர் நோலப் (Christopher Nolan)

  • புவர் திங்ஸ் (Poor Things) - யார்கோஸ் லாந்திமாஸ் (Yorgos Lanthimos)

  • The Zone of Interest - ஜோனத்தன் க்ளேசர் (Jonathan Glazer)


 சிறந்த  திரைப்படம் (தழுவல் கதை (திரைக்கதை))( Best adapted screenplay)



  • அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)- (2001: A Space Odyssey நாவலை தழுவி எடுக்கப்பட்டது.)

  • பார்பி 

  • ஓபர்ஹைமர் (Oppenheimer) (American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’)

  • புவர் திங்க்ஸ் (Poor Things) - (Poor Things Novel by Alasdair Gray)

  • The Zone of Interest


சிறந்த திரைக்கதை



  • அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall)

  • தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

  • மாஸ்ட்ரோ (Maestro)

  • மே டிசம்பர் (May December)

  • பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives)






சிறந்த பின்னணி இசை



  • அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)

  • இன்டியானா ஜோன்ஸ் & டயல் ஆஃப் டெஸ்டினி (Indiana Jones and the Dial of Destiny)

  • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  •  ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • புவர் திங்க்ஸ் (Poor Things)


 


 



Anatomy Of Fall


சிறந்த அனிமேசன் திரைப்படம்



  • தி பாய் & தி ஹீரான் (The Boy and the Heron)

  • எலிமென்டல் (Elemental)

  • நிமோனா (Nimona)

  • ராபர்ட் ட்ரீம்ஸ் (Robot Dreams)

  • ஸ்பைடர் மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் - வர்ஸ் (Spider-Man: Across the Spider-Verse)



சிறந்த படத்தொகுப்பு







  • அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall)

  • தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

  • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  • ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • புவர் திங்க்ஸ் (Poor Things)









சிறந்த ஒளிப்பதிவு







  • El Conde

  • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

  • மாஸ்ட்ரோ (Maestro)

  • ஓபன்ஹைமர் (Oppenheimer)

  • புவர் திங்க்ஸ் (Poor Things)


சிறந்த விசுவல் எஃபட்ஸ்



  • The Creator

  • Godzilla Minus One

  • Guardians of the Galaxy Vol. 3

  • Mission: Impossible - Dead Reckoning Part One

  • Napoleon


சிறந்த அனிமேசன் குறும்படம்



  • Letter to a Pig

  • Ninety-Five Senses

  • Our Uniform

  • Pachyderme

  • War Is Over! Inspired by the Music of John & Yoko





 சிறந்த ஆவண குறும்படம்







  • The ABCs of Book Banning

  • The Barber of Little Rock

  • Island In Between

  • The Last Repair Shop

  • Nǎi Nai and Wài Pó


சிறந்த ஆவணப்படம்



  • Bobi Wine: The People's President

  • The Eternal Memory

  • Four Daughters

  • To Kill a Tiger

  • 20 Days in Mariupol




சிறந்த சர்வதேச திரைப்படங்கள்



  • Io Capitano

  • Perfect Days

  • Society of the Snow

  • The Teachers' Lounge

  • The Zone of Interest


சிறந்த திரையிசை பாடல்



  • The Fire Inside - Flamin' Hot (Diane Warren)

  • I'm Just Ken - Barbie (Mark Ronson, Andrew Wyatt)

  • It Never Went Away - American Symphony (Jon Batiste, Dan Wilson)

  • Wahzhazhe (A Song For My People) - Killers of the Flower Moon (Scott George)

  • What Was I Made For? - Barbie (Billie Eilish, Finneas O'Connell)




கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)


கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவ்ர் மூன் சிறந்த திரைப்படம், சிறந்த நாயகி, சிரந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை, சிறந்த திரையிசைப் பாடல், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு கலை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



Celine song,Greta Gerwig,Justine Triet


வரலாற்று சாதனை 


96-வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த திரைப்படங்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட 10 படங்களில்  மூன்று திரைப்படங்களை இயக்கியவர்கள் பெண் இயக்குனர்கள். அனாடமி ஆஃப் எ ஃபால் (Anatomy of a Fall) இயக்குனர் Justine Triet, பார்பி திரைப்படத்தை இயக்கிய ’Greta Gerwig’, பாஸ்ட் லைவ்ஸ் இயக்கிய 'celine song' ஆகிய திரைப்படங்கள் கடந்தாண்டு வெளியானது.  மூன்று திரைப்படங்களில் கதைகளும் முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பற்றி பேசியிருந்தது. சிறந்த திரைப்படங்கள் பிரிவில் பெண் இயக்குனர்கள் இயக்கிய படம் மூன்று இடம்பெற்றிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த மூன்று படங்களை பார்த்த ரசிகர்கள் ஏதாவது ஒரு படமாவது சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் தெரிவு செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பார்பி திரைப்படம் 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மார்ச் -10ம் தேதி வரை காத்திருப்போம்..!