இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பி சென்ற ஆண்டு இதே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி ஹிட் அடித்த கோலிவுட் திரைப்படம் விக்ரம்.


உலக அளவில் சுமார் 400 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக வந்து ரசிகர்களை குஷிப்படுத்தில் லைக்ஸ் அள்ளிய கதாபாத்திரம் ரோலக்ஸ்.


படம் தொடங்கியது முதலே நடிகர் சூர்யா இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளின் தான் இதுவரை ஏற்றிராத கொடூர வில்லனாக வந்து ரசிகர்களை சூர்யா பயம்றுத்தி இருந்தார். 




ரசிகர்களை திகைக்கச் செய்த இந்தக் கதாபாத்திரம் இணையத்தில் தாறுமாறாக ஹிட் அடித்தது.  மேலும் திரையரங்குகளில் பிற கதாபாத்திரங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் உற்சாகக் கரகோஷங்களையும் இந்தக் கதாபாத்திரம் பெற்றது.


மார்ஷல் ஸ்பீக்கருடன் அறிமுகமாகி தன்னை ’சார்’ என அழைக்க சொல்லி மிரட்டும் கொடூர வில்லன் ரோலக்ஸாக ரசிகர்களை திகைக்க வைத்து ஒரே இரவில் இணையதள சென்சேஷனாக சூர்யா மாறினார். மேலும் தமிழ் சினிமாவில் தான் இத்தனை ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ‘க்ளீன் பாய்’ இமேஜை நொறுக்கி சூர்யா ரோலக்ஸாகக் கலக்கி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.


தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரும் ஹிட் அடித்த நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் அகமகிழ்ந்து போன நடிகர் கமல், சூர்யாவுக்கு ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தார். 


மேலும் சூர்யா செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் அவரை ரோலக்ஸ் ரோலக்ஸ் எனக் கரகோஷம் எழுப்பி இன்று வரை அவரை மகிழ்வித்து வருகின்றனர். 


இந்நிலையில், இன்றுடன் விக்ரம் திரைப்படம் வெளியாகி நிறைவடைந்ததாக ரசிகர்கள் இணையத்தில் இன்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சாக்லேட் பாயாக கோலிவுட்டில் அறிமுகமாகி கொடூர வில்லனாக ரசிர்களை பயமுறுத்திய சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ட்ரெண்ட் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.






தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் கதாபாத்திரம், எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சிறந்த வில்லன், ரோலக்ஸூக்காக தான் பலமுறை திரையரங்குகளில் படம் பார்த்தோம் என்றெல்லாம் தெரிவித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


முன்னதாக ரோலக்ஸ் கதாபாத்திரதை நடிகர் கமல்ஹானுக்காக மட்டுமே தான் செய்த்தாகவும், ரோலக்ஸ் மீண்டும் வருவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் சூர்யா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.