நடிகை ரம்யா பற்றி அவதூறு
தமிழில் பொல்லாதவன் படத்தின் மூலம் கவனமீர்த்தவர் திவ்யா ஸ்பந்தனா . சினிமாவிற்காக இவர் தனது பெயரை ரம்யா என மாற்றிக் கொண்டார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கன்னடத்தில் பல படங்கள் நடித்து பெரியளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார். 2012 காங்கிரஸ் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைமை நிர்வாகியாக இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விலகினார்.
கர்நாடகாவில் ரேனுகா சுவாமி கொலை தொடர்பாக நடிகர் தர்ஷனுக்கு எதிராக ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறு பரப்பும் விதமாக சிலர் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனால் ரம்யா பெங்களூரு சைபர் கிரைம் போலீஸிடம் அளித்த புகாரின் பேரில் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்