கிராமிய கதைகளளில் ல் இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் விமல் . கடந்த சில ஆண்டுகளாக படங்கள் பெரிய வெற்றிபெறவில்லை என்றாலும் நேர்காணல்களில் விமல் கூறும் சுருக்கமான கருத்துக்கள் பெரியளவில் வைரலாகின்றன. இதன் காரணமாக யூடியூப் சேனல்கள் விமலை பெரும்பாலும மீம் மெட்டிரியல் தரும் நபராக மட்டுமே கேள்வி கேட்டு வருகிறார்கள். விமலின் சமீபத்திய பேட்டி வெளியாகி ரசிகர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
தொடர் வெற்றிகளை கொடுத்த விமல்
கில்லி , கிரீடம் , குருவி என பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விமல் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடத்ந்து களவானி , வாகை சூட வா , கலகலப்பு , கேடி பில்லா கில்லாடி ரங்கா , தேசிங்கு ராஜா என அடுத்தடுத்த படங்கள் விமலுக்கு ஹிட் கொடுத்தன. அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்தாலும் அவை விமலை ஒரு நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தவிர்த்து அண்மையில் விமல் நடிப்பில் தொடர்ச்சியாக வெளியானாலும் இந்த படங்களுக்கு பெரியளவில் கவனம் கிடைப்பதில்லை
கேலி செய்யும் யூடியூப் சேனல்கள்
விமல் நடிக்க வந்த அதே சமயத்தில் சிவகார்த்திகேயன் , சூரி ஆகிய நடிகர்களும் வளர்ந்து வந்தார்கள். சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூரி வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நாயகனாக தொடர்ந்து வருகிறார். விமலிடம் எடுக்கும் பெரும்பாலான பேட்டிகளில் உங்களுடன் நடிக்க வந்த சிவகார்த்திகேயன் , சூரி ஆகியோரின் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்கிற கேள்வியே எழுப்பப்படுகிறது. தன்னைச் சுற்றி எவ்வளவு நெகட்டிவிட்டி சூழ்ந்தாலும் கூலாக விமல் பதிலளிக்கும் முறை ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் யூடியூப் சேனல்கள் விமல் வைரலாகிற மாதிரி ஏதாவது கருத்து பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவரிடம் கேள்வி எழுப்பபடுகிறது. இந்த போக்கை பலர் சமூக வலைதளத்தில் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்கள்.
மகாசேனா
விமல் தற்போது தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் மகாசேனா படத்தில் நடித்துள்ளார். பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் ஸ்ருஸ்டி டாங்கே , ஜான் விஜய் , யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது