"Varisu" Photo Leak : மறுபடியும் "வாரிசு" விஜய் புகைப்படம் லீக் - ரசிகர்கள் குதூகலம்
இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்திற்கான அடுத்த ஷூட்டிங் ஷெட்யூல் வைசாக்கில் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ஷெட்யூலின் படி விஜய் நடிக்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
துறைமுகத்தில் படப்பிடிப்பு :
வைசாக்கில் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக இருப்பதால் இளைய தளபதிய ரசிகர்கள் குதூகலமாக இருக்கின்றனர். தற்போது வைசாக் துறைமுகத்தில் முக்கியமான அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என கூறப்படுகிறது.
விஜயின் புதிய புகைப்படம் லீக் ஆனது :
அவ்வப்போது படப்பிடிக்கு இடத்தில் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் விஜயின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படம் ஒன்றை கிளிக் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது உலகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படி வாரிசு படப்பிடிப்பின் போது விஜய்யின் புகைப்படம் லீக் ஆவது இது முதல் முறை அல்ல. பல புகைப்படங்கள் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புகைப்படத்தில் விஜய் பல வகையான உடைகளில் மிடுக்காக காணப்படுகிறார். அந்த வகையில் தற்போது லீக் ஆன புகைப்படத்தில் விஜய் சூட்டில் காணப்படுகிறார்.
பொங்கல் 2023 ரிலீஸ்:
வாரிசு திரைப்படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கமர்சியல் திரைப்படம். சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு திரை விருந்தாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடைந்து 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்ம ஜோடி:
வாரிசு திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக இணைகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் திரையை பகிர்வதில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் ராஷ்மிகா. இப்படம் ஒரு முழுமையான தமிழ் படம் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்கிறார்கள் பட குழுவினர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷியாம் உள்ளிட்ட ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.