நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இந்தியில் முதன்முறையாக இயக்கப்போகும் படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


 






 


இந்த வாரம் இதை விட சிறப்பாக தொடங்கியிருக்க முடியாது. இந்தியில் நான்   ‘ஓ சாத்தி ஜால்' படத்தை இயக்குவதன் மூலம், அங்கு இயக்குநராக களமிறங்கி இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த, உண்மையான காதல் கதை” என்று பதிவிட்டு இருக்கிறார். 


திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவருக்கும் தனுஷிற்கும் இடையே விவகாரத்தான கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து பேசிய தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா, சாதரண குடும்ப சண்டைதான் என்று விளக்கமளித்தார். ஆனால் தனுஷூம் சரி, ஐஸ்வர்யாவும் சரி இந்த விவகாரத்தில் முடங்கிவிடவில்லை.


தத்தமது வழிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். தனுஷ் வாத்தி படத்தில் பிசியாக, ஐஸ்வர்யா முசாபிர் பாடல் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். அண்மையில் அந்த பாடல் வெளியாகியிருந்த நிலையில், அதனை கணவர் தனுஷ் நண்பர் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருந்தார்.   இதற்கிடையே ஐஸ்வர்யா சிம்புவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐஸ்வர்யா ராகவா லாரன்ஸை சந்தித்து பேசினார்.