தந்தையை பல நாள்களாக தேடிக்கொண்டிருந்த லட்சுமி, இறுதியில் டாக்டர் பாரதி தான் தன்னுடைய அப்பா என அறிந்துக்கொள்வது போன்ற புதிய ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நிச்சயம் வரும் வாரங்களில் விறுவிறுப்பாக கதைக்களம் நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு மிகப்பெரிய ரீச் ஆனது. டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தைத்தான் பெற்றது. சராசரி குடும்பத்தில் பிறந்த பெண், பெரிய குடும்பத்தில் அதுவும் டாக்டரை திருமணம் செய்துக்கொள்வதால் மாமியார் வெறுப்பதாகக் கதைக்களம் நகரும். அதிலும் கருப்பான பெண் கண்ணம்மா என்பதால் அவரை மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்  நாளடைவில் , அவளின் நல்ல மனதைப்பார்த்து மாமியார் சௌந்தர்யாவும் மனம் மாறுகிறார். ஆனால் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.



இந்நிலையில் தான், கடந்த  மாதம் லட்சுமியின் அப்பா யார் என கண்ணம்மா கூறுவது போல ப்ரோமோ வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள்,  கண்ணம்மா சீரியலுக்கு என்ட் கார்டு போட போகுதுன்னு நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் லட்சுமியிடம் உனது அம்மா, அப்பா எல்லோரும் கண்ணம்மா தான் என கூறிவிடுகிறார். இதன் பின்னர் லட்சுமி தன்னுடைய அப்பா என யார் எனத் தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். இந்நிலையில் தான் பாரதியிடம் வளரும் ஹேமா, தனக்கு அம்மா வேண்டும் என நினைக்கவே லட்சுமியிடம் உன்னுடைய அம்மா கண்ணம்மாவுக்கும், என்னுடை அப்பா பாரதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா எனக்கேட்கிறார். இதனால் ஆத்திரமடையும் லட்சுமி, “ இனி தேவையில்லாமல் எதுவும் பேசாத, நிச்சயம் என் அப்பா வருவார்“ என கூறிவிடுகிறார்.


 



இதன்பின்னர் தொடர்ந்து கண்ணம்மா என்ன சொன்னாலும், தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை வைத்துக்கொண்டு அப்பாவைத் தேடி வருகிறார். தவிப்புடன் தன் தந்தையை லட்சுமி தேடிவருகிறார். இதற்கிடையில் தான் லட்சுமி எதையும் கேட்காமல் அப்பா யார் எனத் தேடிக்கொண்டு இருப்பதாகவும், பாரதி தான் அப்பா என சொல்லிவிடுவேன் என்று பாரதி குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார். ஆனால் பாரதி இதனை மறுக்கவே, கண்ணம்மா நான் நீங்கள் தான் லட்சுமியின் அப்பான்னு சொல்லப்போறேன்னு சொல்வதை லட்சுமி கேட்டு விடுகிறார்.


பாரதி அங்கிங் தான் என்னோட அப்பா எனக்கூறுவதுபோல இந்த வார ப்ரோமோ முடிவடைகிறது. இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் இப்பவாவது பாரதி கண்ணம்மாவிற்கு என்ட் கார்டு போட்டுரூவீங்களா? என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சீரியல் முடியும் போது லட்சுமிக்கு கல்யாணமே முடிந்து விடும், சீரியல்ல feelings இருக்கலாம் ஆனா feelings eh சீரியல்லா இருக்க கூடாது எனவும் சோசியல் மீடியாவில் கமெண்ட்களைத் தெறிக்கவிடுகின்றனர்.