ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  நடிகரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்து பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.  அந்த வகையில் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த அவர், தற்போது முழு நேர கதாநாயகியாக VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ  தயாரிப்பில் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ளஓ மை கோஸ்ட் படத்தில் அறிமுகமாகியுள்ளார். 


ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 






நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்து, தான் இதுவரை குறும்படம் மற்றும் டிக்டாக் வீடியோக்களில் மட்டுமே நடித்த நிலையில் படத்தில் நடிக்க பயமாக இருக்கிறது என இயக்குநர் யுவனிடம் சொன்னதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த தைரியத்தில் தான் நடித்துள்ளேன். மேலும் இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்கள் என்று கூறினார்கள். அப்படி என்றால் யார் என்று கேட்டேன். 


எனக்கு வரும் லெட்டரில் சன்னி லியோன் என வரும். ஆனால் யாருன்னே எனக்கு தெரியாது. ஆனந்த் தம்பி தான் சில படங்களை காட்டி இவங்க தான் சன்னி லியோன் என சொன்னான். உடனே அனைவரும் சிரிக்க, நீங்க தப்பா நினைக்காதீங்க. போட்டா காட்டினான் என சொன்னேன் என ஜி.பி.முத்து சொல்ல சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது. படத்தில் நானும் சன்னிலியோனும் ஒரு நடன காட்சியில் நடித்துள்ளோம். 




அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீங்கள் ஹீரோவாக நடித்தால் யார் ஹீரோயின், வில்லனாக நடிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு ஹீரோயின் நயன்தாரா என பளீச்சென பதில் சொன்ன ஜி.பி.முத்து தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஆர்.கே.சுரேஷ் வில்லனாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.