தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார். தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் "சூர்யாவின் சனிக்கிழமை" படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த  தயாரிப்பு நிறுவனம், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.


நானி 32:


நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்துள்ளது. டி.வி.வி என்டர்டெயின்மென்ட்  பேனரின் கீழ் நானி 32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் சுஜித் இயக்கவுள்ளார்.


தற்போது படப்பிடிப்பில்  இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனான "ஓஜி" படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். சூர்யாவின் சனிக்கிழமை  படப்பிடிப்பு முடிந்தவுடன், நானி 32 படத்தின் பணிகள் துவங்கும். 


படத்தின் கதை என்ன?


இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில் "இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு... இந்த லவ்வரிடம் வருவார் #Nani32" என்று மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார். அதிரடியான ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு,  ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. இது தனித்துவமானதாக இருக்கும் அதே நேரத்தில் புதிரானதாகவும் அமைந்துள்ளது.


நானி 32வது திரைப்படம் 2025 இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.  தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை  தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


ஹாய் நானா:


அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் நானி , மிருணால் தாக்கூர் நடித்த ‘ ஹாய் நானா’ படம்  வெளியானது. இப்படம் நானியின் 30 ஆவது படமாக வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் நானி நேற்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.


மேலும் படிக்க: 


Flop heroines in OTT: ஹன்சிகா முதல் ஸ்ருதி வரை! ஓ.டி.டி.க்கு செட்டாகாத தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள்!