விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரச்சிதா. இதைத்தொடர்ந்து நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மக்களின் பேரன்பை பெற்ற ரச்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் உப்பு கருவாடு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பின்பு ஒரு சில கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

பிக்பாஸ் என்ட்ரி

சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அதற்கான காரணத்தையும் ரச்சிதாவே வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன சமயத்தில், "எனக்கு தேடல் ஒன்று இருந்தது. என்னை நானே புரிந்துக் கொள்வதற்கு பிக்பாஸ் வீடு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

விவாகரத்து 

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ரச்சிதாவும் தினேஷும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். அனைவரையும் கவர்ந்த இந்த காதல் ஜோடியின் வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தினேஷ் ரச்சிதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். அதே நேரத்தில் தினேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ரச்சிதா தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த காதல் ஜோடி சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

Continues below advertisement

ஃபயரால் வந்த சர்ச்சை

சீரியல்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்த ரச்சிதா முதல் முறையாக ஃபயர் படத்தின் மூலம் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். படத்தின் டீசர் வெளியான நேரத்தில் ரச்சிதாவின் கவர்ச்சி நடனமும் வீடியோக்களும் தான் அதிகமாக பேசுபொருளாக மாறியது. கணவரை பிரிந்த சோகம், சினிமாவிற்காக தன்னை மாற்றிக்கொண்டார் எனவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஃபயர் படம் வெளியான போது ரச்சிதாவின் கதாப்பாத்திரம் பாராட்டை பெற்றது. ஃபயர் படம் என்றாலே ரச்சிதா தான் என்ற அளவிற்கு மாறிவிட்டது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்

ஃபயர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா, நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கவர்ச்சியான நடனம் அல்லது கதாப்பாத்திரம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரச்சிதா இனிமேல் அது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். குறிப்பாக எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்த தயராக இருப்பதாகவும், கவர்ச்சி கதாப்பாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என முடிவெடுத்திருக்கிறாராம். இதைத்தொடர்ந்து ஒரு வெப் தொடரிலும் ரச்சிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.