இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பாப் கலாசாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸுக்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார். ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியது. பின்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அவர் மீது மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது போன்ற நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 



ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தால் சர்ச்சை


அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களில் எதிலும் அவருடைய அந்தரங்க பகுதி தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்பட சீரிஸ்-இல் வெளியான மற்றொரு புகைப்படத்தில் அவருடைய அந்தரங்க பகுதிகள் தெரிந்தன. இந்த ஒரு புகைப்படத்தின் அடிப்படையில்தான் மும்பை காவல்துறை ஜூலை 26 அன்று ரன்வீர் சிங் மீது ஆபாச குற்றச்சாட்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தது. இந்த குறிப்பிட்ட புகைப்படம் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றிய ஏழு புகைப்படங்களில் இல்லை என்று ரன்வீர் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: ”விஜயகாந்த் ஒரு மகான்; இதை செய்தால் இப்போகூட எழுந்து வந்துடுவார்“ - மனம் திறந்த ராதாரவி!


நிரூபிக்கப்பட்டால்…


தற்போது அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அதனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், ரன்வீர் சிங் வழக்கில் இருந்து விடுவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






ரன்வீர் பக்கம் ஆதாரங்கள்


ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றிய புகைப்படங்கள் ஆபாசத்தின் வரையறையின் கீழ் வராது, ஏனெனில் அந்தரங்க பாகங்கள் எதுவும் தெரியவில்லை என்று ஆதாரங்கள் மேலும் தெரிவித்தன. அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஏழு புகைப்படங்களும் ஆபாசமானவை அல்ல என்றும், உள்ளாடை அணிந்திருந்ததாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவரது 'அந்தரங்க பாகங்கள் தெரியும்’ என்று புகார்தாரர் கூறியுள்ள புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதாகவும், அது போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். “ஃபோட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அவர் எங்களுக்கு வழங்கினார். போலீஸ் குழு அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் சரிபார்த்தது, அதில் புகார்தாரர் கொடுத்த புகைப்படங்கள் இல்லை, ”என்று அதிகாரி மேலும் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண