பிரசாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 ஆவது படத்தை கே.ஜி.எஃப் படத்தை இயக்கி பிரபலமான பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று அந்தப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. 


 






மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆரின் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்க உள்ளனர். 


பிரசாந்த் நீல் பேட்டி:


இந்த  படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், "இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரமாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் இன்று அமைந்துள்ளது." என்றார்.


 






இந்தப்படம் குறித்து முன்னதாக பிங்க் வில்லா இணையதளத்திற்கு பேசிய பிரசாந்த் நீல், “ அடுத்த வருடம் இந்தப்படம் திரையரங்குளில் வெளியாகும். இந்தப்படத்தை இயக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நான் கடந்த 15, 20  வருடங்களாக என்.டி.ஆரின் ஃபேனாக இருக்கிறேன். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கும் முன் ஜூனியர் என்.டி.ஆரை கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட முறை சந்தித்தேன். அவரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள விரும்பினேன். இப்படித்தான் என்னுடைய எல்லா நடிகர்களை அணுகுவேன்.” என்று பேசினார்.