ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படம் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , கொரோனா பேரச்சம் காரணம் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது வலிமை அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தாலும் , ரசிகர்களின் நலம் கருதியும் , அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டும் படத்தின் தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்திற்காக மீண்டும் வலிமை கூட்டணி இணைந்துள்ளது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஹச்.வினோத் இயக்க , போனி கபூரே அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்கிறார். படத்தின் பூஜை வருகிற ஜனவரி 16-ஆம் தேதி துவங்கும் என கூறப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதுவும் தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு யார் இசையமைக்க போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் , இசையமைப்பாளர் ஜிப்ரானை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் உலா வந்துக்கொண்டிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அஜித்தின் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும் பின்னணி இசையை உருவாக்கியவர் ஜிப்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை முழுக்க முழுக்க ஆக்ஷன் டிராமாவாக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அஜித்தின் 61 படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டிருக்கும் என வினோத் கூறியுள்ளார். AK61 குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் படத்தின் சில அப்டேட்டை கசிய விட்டிருக்கிறார். அதாவது அஜித் 61 படம் நிச்சயமாக ஆக்ஷன் திரைப்படமாக இருக்காது. டயலாக்ஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க உள்ளதாகவும் வழக்கமாக அஜித் படங்களில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளை விட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளோடு உருவாக உள்ள இந்த திரைப்படம் , இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கதையின் கருவாக கொண்டு உருவாக உள்ளதாம். படத்தில் அஜித் நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் , அஜித்தின் லுக்கை புதுமையாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகி மற்றும் பிற விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.