28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா இன்று கொல்கத்தாவில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொண்டார். இவர்களுடன் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ராணி முகர்ஜி மற்றும் மகேஷ் பட் போன்ற பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


 



 


பதான் சர்ச்சை குறித்து ஷாருக் :


KIFF விழாவில் நடிகர் ஷாருக்கான் ஸ்பீச் கேட்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் அவர் மேடை ஏறியதும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெங்காலியில் அவர் உரையை தொடங்கியது கொல்கத்தா மீது அவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தியது. நடிகர் தனது உரையை ரிலீஸாக தயாராக இருக்கும் அவரின் பதான் படத்திற்கு எதிராக சோசியல் மீடியாவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேச ஆரம்பித்தார்.


இன்றைய நவீன உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு ஊடகம் சோசியல் மீடியா. இவை மனிதனின் அனுபவம் மற்றும் உணர்ச்சிகளின் முதல் வெளிப்பாடாக உள்ளன. சோசியல் மீடியாவின் வளர்ச்சி சினிமாவை பற்றின நெகட்டிவிட்டியை அதிகரிக்காது. மாறாக இது சினிமாவின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.  


 






வெளிப்படுத்துவது எளிது :


சினிமா மூலம் மனிதனின் இயல்பை எளிதாக வெளிப்படுத்த முடியும். வெவ்வேறு கலாச்சாரம், நிறம், சாதி மற்றும் மதம் கொண்ட மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான எளிதான ஒரு வழிமுறையாகும். இதன் மூலம் மனிதர்களுக்குள் இருக்கும் அன்பு, பாசம், சகோதரத்துவம் உள்ளிட்ட திறன்கள் வெளிப்படும்.  


 






ஸ்டே பாசிட்டிவ் :


கொரோனா தோற்றால் உங்களை எல்லாம் சில காலமாக பார்க்க முடியாமல் இருந்தது. தற்போது நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம். நாம் அனைவரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த உலகம் நமக்கு எதை செய்தாலும் நீங்கள், நான் என அனைவரும் பாசிட்டிவாக இருப்போம். இந்த நவீன காலகட்டத்தில் சினிமா என்பது மிகவும் முக்கியமான மீடியாவாகும். இதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு உலகத்தை உருவாக்குவோம் என பேசியிருந்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.