இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும் இவர் மீது இன்னும் பல குற்றங்கள் நிலுவையில் இருந்து வருகிறது. 


இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார். தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார்.


இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார்.




இவர் பேசும் ஒவ்வொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் சாப்பாடு ராமன் யூடியூப் சேனல் புகழ் பொற்செழியன் குறித்து நித்தியானந்தா பேசி வரும் வீடியோ வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் நித்தியானந்தா, தமிழ்நாட்டில் உள்ள சாப்பாடு ராமன் என்னும் பொற்செழியன் அவரது யூடியூப் சேனலில் அதிகளவில் உணவுகளை உட்கொள்வார். அந்த உணவுகளை ஜீரணிக்க அவர் அதே சேனலில் மருந்து ஒன்றையும் பரிந்துரை செய்தார். அது எனக்கு பயன் உள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து, என்னுடைய உடம்பில் உள்ள கொழுப்பை கரைத்து தூய்மையாக வைத்துகொள்ள அவர் சொன்ன அந்த ஜீரண ரகசியம் பெரிதாக உதவியது. சாப்பாடு ராமன் தயாரித்து விற்பனை செய்து வரும் அந்த மருந்தை என்னால் இந்தியாவில் இருந்து கைலாசத்திற்கு கொண்டு வர முடியவில்லை. ஆனால், அந்த வீடியோவில் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு என 5 சாறுகள் பற்றியும் தெரிவித்திருந்தார். அதை குறித்துக்கொண்டு அதை பயன்படுத்தி பார்த்தேன் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாகவும் நித்தியானந்தா தெரிவித்தார்.




யார் இந்த சாப்பாடு ராமன் ? 


ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவுகளை உட்கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர்தான் இந்த சாப்பாடு ராமன் என்னும் பொற்செழியன். இவரது யூடியூப் சேனலான சாப்பாடு ராமன் பக்கத்தை 1.28 மில்லியன் பேர்கள் லைக்ஸ் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் மருத்துவரராக பணியாற்றி வருகிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண