நிக்கி கல்ராணி கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த விளக்கம் ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


 






அந்தப்பதிவில், “ இந்த பெரிய செய்தியை பற்றி எனக்கு தெரியாது. தற்போது சில பேர் நான் கர்ப்பமாகியுள்ளதாக கூறி, அந்த செய்தியை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படியே, தயவு செய்து குழந்தை பிறப்பு செய்தியையும், எனக்கு சொல்லி விடுங்கள்.


நான் கர்ப்பமாக இல்லை. அப்படி, நான் கர்ப்பம் தரித்தால் அந்த மிகப்பெரிய செய்தியை எதிர்காலத்தில் வெளியிடும் முதல் நபராக நானே இருப்பேன். உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டு  இருக்கிறார்


 






தமிழ் சினிமாவில் ஜி.வி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதையெடுத்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி நடித்துள்ளார்.


 


தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக இருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணியும் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகரான ஆதியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.