சாய் பல்லவியின் அடுத்த வைரல் பாடல் 


சாய் பல்லவியின் "சாரங்க தரியா " பாடல் வெளியாகி சில  நாட்களிலே 50 மில்லியன் வியூஸ் பெற்று உள்ளது. சாய் பல்லவியின் முதல் வைரல்  ஹிட் பாடலாக அமைந்த பாடல் "rowdy baby " 100 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது. சாய் பல்லவியின் நடனம் அனைத்து குழைந்தைகளால் ரசிக்கப்பட்டது, தற்போது அதற்கு ஈடாக தெலுங்கு "லவ் ஸ்டோரி " படத்தில் "சாரங்க தரியா " பாடல் வெளியாகி சில நாட்களிலே 50 மில்லியன் வியூஸ்களை பெற்று உள்ளது .

Continues below advertisement


இந்த படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவிக்கு ஜோடியாக நடிக்கிறார், சுடாலா அசோக் தேஜா இந்தப் பாடலை எழுதியுள்ளார், பவன் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார் ,சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார் . மங்லி  இந்தப் பாடலை பாடியுள்ளார் ,இந்த பாடல்   சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக வளம் வருகிறது ,  மேலும் யூடியூபில் அதிகம் பிரபலமான வீடியோக்களில் ஒன்றாக இது திகழ்கிறது.


 படத்தின் கதைக்களம் தங்கள் கனவுகளைத் தொடர தங்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்குச் செல்லும் இரண்டு நபர்களின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. படம் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.